ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் மாணவர்களுக்கு ஒருநாள் விவசாயப் பயிற்சி- மக்கள் பாதை அமைப்பின் அசத்தல் முயற்சி

விருதுநகரில் மாணவர்களுக்கு ஒருநாள் விவசாயப் பயிற்சி- மக்கள் பாதை அமைப்பின் அசத்தல் முயற்சி

X
விவசாயப்

விவசாயப் பயிற்சியில் மாணவர்கள்

விருதுநகரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒருநாள் விவசாயப் பயிற்சி அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் பொங்கலை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு நாள் விவசாயி பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழர் திருநாளானபொங்கல் திருநாள், விவசாயம் சார்ந்த ஒரு பண்டிகை என்பதை அனைவரும் அறிவர். ஆனால் இன்றைய சூழலில் பொங்கல் வைப்பது ஒரு சம்பிரதாயமாக மட்டுமே இருந்து வரும் நிலையில் விவசாயமும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த சுழலில் விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய முயற்சியை கையில் எடுத்த விருதுநகர் மக்கள் பாதை இயக்கம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு நாள் விவசாயி பயிற்சி அளிக்கலாம் என முடிவு செய்தது.

விவசாயப் பயிற்சியில் மாணவர்கள்

இதன்படி விருதுநகர் அருகே உள்ள வடமலை குறிச்சி கிராமத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயம் சார்ந்த கால்நடை பராமரிப்பு, களை எடுத்தல், வரப்பு வெட்டுதல், நாற்று நடுதல் போன்ற வேலைகள் கற்றுக்கொடுப்பட்டது.

விவசாயப் பயிற்சியில் மாணவர்கள்

இதில்கலந்து கொண்ட மாணவர்கள் ஒரு விவசாயி எவ்வளவு கஷ்டப்பட்டு உணவு உற்பத்தி செய்கிறார் என்பதை புரிந்து கொண்டதாகவும் இனிமேல் உணவை வீணாக்க கூடாது என முடிவு செய்துள்ளதாகவும் கூறினர்.

விருதுநகர் தேவாலயத்தில் கிறிஸ்துவ மதத்தினர் கொண்டாடிய பொங்கல் விழா...

நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த மக்கள் பாதை இயக்கம் மாவட்ட நிர்வாகி பேசுகையில், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் இனிவரும் காலங்களில் இதை தொடர்ச்சியாக செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar