ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ... பாதுகாப்பாக இருக்க மருத்துவர் அறிவுரை

விருதுநகரில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ... பாதுகாப்பாக இருக்க மருத்துவர் அறிவுரை

மாதிரி

மாதிரி படம்

Virudhunagar | விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் பாதிப்பு வேகமாக பரவிவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

மழைக்காலம் என்பதால் தற்போது மெட்ராஸ் ஐ எனப்படும் கண் பாதிப்பு தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவிவருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் கண் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதனால் கண் மருத்துவமனைகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

மெட்ராஸ் ஐ:

அமெரிக்காவில் சிவப்பு கண் நோய் என்றும் இந்தியாவில் மெட்ராஸ் ஐ என்றும் அழைக்கப்படும் இந்த நோய் அடினோ வைரஸ் எனும் ஒருவித வைரஸால் ஏற்படுகிறது. 1918 ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் பகுதியில் இந்த நோய் முதன் முதலில் பரவ ஆரம்பித்தது. அன்று முதல் மெட்ராஸ் ஐ என அறியப்பட்டு தொடர்ந்து மற்ற பகுதிகளில் பரவினாலும் இது மெட்ராஸ் ஐ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இதில் கண்ணில் உள்ள வெண் திரை பகுதியில் வைரஸ் தொற்று ஏற்படுவதால் கண்கள் சிவந்து வலி ஏற்படும்

அறிகுறிகள்:

நோய் பாதிப்பு ஏற்பட்டால் கண் சிவப்பாதல், கண் உறுத்தல், எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

மெட்ராஸ் ஐ பொதுவாக வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. சாதரணமாக வரும் இந்த கண்வலி, மருத்துவரை சந்தித்து மருந்து எடுத்து கொண்டால் இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும். ஆனால தற்போது வந்துள்ள இந்த நோய் குணமாக பத்து நாட்கள் என்றும், கவனிக்காமல் விட்டுவிட்டால் பார்வையில் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார் கண் மருத்துவர் கமல் பாபு.

கூலர்ஸ் தேவையில்லை!

மேலும் இந்த நோய் நோயாளி பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவன் மூலமாகவே பரவுமே தவிர அவரின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதன் மூலம் பரவாது. அதனால் கண்களுக்கு கண்ணாடிகள் அணிவது தேவையில்லாத ஒன்று. நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சை பெற்று வந்தால் சரியாகி விடும் என்று அவர் கூறினார். குறிப்பாக பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் தனிமைப்படுத்தி குணமாகிய பின்னர் பள்ளிக்கு அனுப்புவதன் மூலம் நோய் பரவலை கட்டுபடுத்த இயலும் என்றார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar