முகப்பு /விருதுநகர் /

“தேவையானதை எடுக்கலாம்.. தேவையற்றதை வைக்கலாம்..“ அருப்புக்கோட்டையில் பேரன்பை பறைசாற்றும் அன்புச் சுவர்..

“தேவையானதை எடுக்கலாம்.. தேவையற்றதை வைக்கலாம்..“ அருப்புக்கோட்டையில் பேரன்பை பறைசாற்றும் அன்புச் சுவர்..

X
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அன்புச்சுவர்

Virudhunagar District News : அருப்புக்கோட்டையில் பேருந்து நிலையத்தில் அன்புச் சுவர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

தேவையான பொருட்களை எடுத்து செல்லவும், தேவையில்லாத வேண்டாத பொருட்களை வைத்து செல்லும் வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அன்பு சுவர் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மனிதர்களிடையே இருக்க வேண்டிய பண்புகளில் முக்கிய பண்பு ஈகை பண்பு. அதனால் தான் திருவள்ளுவர் வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் யெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து. என்று திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி வறுமையில் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவுவதே உண்மையான ஈகை குணம். மற்றவை ஒருவித பலனை எதிர்பார்த்து கொடுப்பது என்று பொருள். கொடுத்து உதவும் பண்பு தான் மனிதனை உயர்த்தி காட்டும். மக்களிடையே இந்த கொடுத்துதவும் ஈகை பண்பை வளர்க்க அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் அன்பு சுவர் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் நமக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : சதுரகிரியில் மார்கழி தரிசனம்... 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு..

அன்பு சுவர் :

உதவும் கரங்கள் என்ற சுவரொட்டியுடன் இருக்கும் இந்த சுவற்றில் மக்கள் தங்களுக்கு தேவைப்படாத பழைய ஆடைகள் மற்றும் நோட்டு புத்தகங்களை வைத்து செல்கின்றனர். அதை சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளியோர் வந்து எடுத்து செல்கின்றனர்.

நகராட்சி சார்பில் ஏற்படுத்தப்படுள்ள இந்த அன்பு சுவர் குறித்து பேசிய அருகில் இருக்கும் மக்கள் உண்மையில் இந்த அன்பு சுவர் அருமையான ஒரு திட்டம். நமக்கு தேவையில்லாத ஒன்றை கீழே போடாமல் இங்கு கொண்டு வந்து வைப்பதன் மூலம் அது வீணாகாமல் மற்றவர்களுக்கு பயன்படும் என்றும் அருப்புக்கோட்டை மக்கள் தங்களுக்கு தேவைப்படாத பழைய பொருட்களை கீழே போடாமல் இங்கு கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதற்கு முன்பு தமிழ்நாட்டின் சில இடங்களில் அன்பு சுவர்கள் வைக்தப்பட்டிருந்தாலும், தற்போது அவை காணமல் போய்விட்டன.நீண்ட இடைவெளிக்கு பின் அருப்புக்கோட்டையில் அன்பு சுவர் வந்திருப்பது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில் பிறருக்கு கொடுத்து உதவுவதும் ஒருவித இன்பம் தானே.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar