வேலையில்லா மாற்றுதிறனாளிகளுக்கான தொழில் கடன் தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில், வேலையில்லா திண்டாட்டத்தினை தணிப்பதற்காக தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் சுயதொழில் கடனுதவி திட்டங்களை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி தொழில் முனைவோர்களாக திகழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை நிறைவேற்றிட, தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய மாற்றுதிறனாளிகள் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகள் பெற்றிருந்தால், உற்பத்தி பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மான்யத்துடன் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவித் தொகையினை திரும்ப செலுத்திடும் தவணைத் தொகைகளில் விதிக்கப்படும் வட்டியில் 3 விழுக்காடு வட்டித் தொகையினை பின்னேற்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைத் தொழில் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெறுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை. மேற்கண்ட கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும்.
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் மற்றும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையில் திட்ட மதிப்பீடாக கொண்டு வரலாம். இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில் வகைகளுக்கு 35 விழுக்காடு மானியமாக ரூ.17.5 லட்சம் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 விழுக்காடு பங்களிப்புத் தொகையானது மாற்றுத்திறனாளி நலத்துறையினரால் மான்யமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.
மேலும், தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ‘படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், வியாபார நடவடிக்கைகளுக்கு 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளுக்காக 55 வயது உச்ச வரம்பிற்குள் கல்வித் தகுதி நிபந்தனை நீக்கப்பட்டு, 25 விழுக்காடு மானியத்துடன் கூடிய கடனுதவி வியாபாரம் ரூ.5 லட்சம், உற்பத்தி தொழிலுக்கு ரூ.15 லட்சம் வரை வழங்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 விழுக்காடு பங்களிப்புத் தொகையானது மாற்றுத்திறனாளி நலத்துறையினரால் மான்யமாக வழங்கப்படுகிறது. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் காப்பாளர்களுக்கு மேற்கண்ட தகுதிகளின்படி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
Must Read : காஞ்சி நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - ரசித்து சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது!
எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட கடனுதவி திட்டங்களில் தங்களுக்குத் தகுதியான கடனுதவி திட்டத்தை தேர்வு செய்து www.msmeonline.tn.gov.in/uyegp/needs மற்றும் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மான்யங்களை பெற்று பயனடையுமாறும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது 8925534036 என்ற தொலைபேசியிலோ கூடுதல் விபரங்களுக்கு அணுகுமாறு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Loan, Local News, Virudhunagar