விருதுநகர் மாவட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாக 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. மாணவர்கள் அனைவரும் உயர்கல்விக்கு செல்ல கல்லூரிகளில் அட்மிஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கலை அறிவியல் பிரிவில் பயில விரும்பும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் எங்கெல்லாம் அரசு கலைக்கல்லூரி உள்ளது? அதில் உள்ள பாடப்பிரிவுகள் என்னென்ன? அரசு எத்தனை இடங்களை அதற்கு ஒதுக்கியுள்ளது என்பது பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்.
1. அரசு கலை அறிவியல் கல்லூரி - சாத்தூர்:
சாத்தூரில் உள்ள இந்த கல்லூரியில்
B.A Tamil - 60 இடங்கள் , B.A English - 60 இடங்கள், B.com - 60 இடங்கள், B.Sc Mathematics - 60 இடங்கள் என மொத்தம் நான்கு பாடப்பிரிவுகள் உள்ளன.
2 அரசு கலை அறிவியல் கல்லூரி- திருச்சுழி
இந்த கல்லூரியில் B.A Tamil- 50 இடங்கள், B.A English- 50 இடங்கள், B.Com - 50 இடங்கள், B.Sc Computer science- 40 இடங்கள், B.Sc chemistry-40 இடங்கள் என மொத்தம் ஐந்து பாடப்பிரிவுகள் உள்ளன.
3. அரசு கலை அறிவியல் கல்லூரி- அருப்புக்கோட்டை
இங்கு B.A TAMIL, B.A ENGLISH, B.COM, B.SC MATHEMATICS என நான்கு பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தலா 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
4. அரசு கலை அறிவியல் கல்லூரி- ஶ்ரீ வில்லிபுத்தூர்
இங்கு B.A TAMIL, ENGLISH, B.COM, B.SC COMPUTER SCIENCE, B.SC MATHEMATICS என ஐந்து பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் கணிப்பொறி அறிவியலுக்கு மட்டும் நாற்பது இடங்களும் மற்றவைகளுக்கு தலா 60 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
5. அரசு கலை அறிவியல் கல்லூரி- சிவகாசி
விருதுநகர் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக இங்கு தான் 12 பாடப்பிரிவுகள் உள்ளன. அவை B.A TAMIL - 60 SEAT, B.A ENGLISH- 60 SEAT, B.COM - 60 SEAT, B.SC MATHEMATICS- 60 SEAT, B.SC COMPUTER SCIENCE- 40 SEAT, B.A HISTORY- 60 SEAT, B.SC ZOOLOGY- 40 SEAT, B.A ECONOMICS- 60 SEAT, BBA- 60 SEAT, B.SC- PHYSICS- 40 SEAT, B.SC CHEMISTRY- 40 SEAT, B.SC BOTANY- 40 SEAT
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேற்சொன்ன கல்லூரியில் அட்மிஷன் செய்ய விரும்புவோர் www.tngasa.com என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 19
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education, Local News, Virudhunagar