தமிழகத்தில் வரும் 6ம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகமெங்கும் கார்த்திகை தீபத்திற்கான விளக்குகள் தயாரிக்கும் பணி மற்றும் அதற்கான விற்பனையானது தொடங்கியுள்ளது.
பொதுவாக தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை நாளன்று அனைவரும் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றி தீபத்தை கொண்டாடுவது வழக்கம்.
அதேபோல் தற்போது கார்த்திக்கை மாதம் தொடங்கியுள்ளதால் வரவுள்ள கார்த்திகை தீபத்திற்காக விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் விளக்கு தயாரிக்கும் தொழிலாளர்கள்.
இதையும் படிங்க : விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
விருதுநகர் அருகே சித்தூரில் கடந்த 30 ஆண்டுகளாக விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முத்து முருகன் தற்போது சீசன் தொடங்கி விட்டதால் விளக்குகளை தயாரித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் விளக்கு தயார் செய்ய ஏற்ற மண்ணை தேர்வு செய்து அதை ஒரு நாள் முழுவதும் வெயிலின் காய வைத்து, பின்னர் அதை இரண்டு நாள் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் அதை வடிகட்டி அதையும் ஒரு நாள் முழுவதும் அப்டியே வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இப்படி செய்வதன் மூலம் மண், விளக்கு செய்வதற்குரிய பதத்திற்கு வந்து விடும். பின்னர் அதை அச்சில் வைத்து விளக்கு செய்யலாம் என்றார்.கையால் அந்த மண்ணை பிசைந்து விளக்கு போல அந்த வடிவத்திற்கு கொண்டு வருவதெல்லாம் எல்லோராலும் இயலாது. தகுந்த பயிற்சி பெற்றிருத்தல் அவசியம். பின்னர் அந்த ஈர விளக்குகளை காய வைத்து, நெருப்பு வைத்து பலப்படுத்துகின்றனர்.
மேலும் படிக்க : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!
இப்படி மண்ணை பதப்படுத்துவது, காய வைப்பது என ஒரு விளக்கு செய்ய சராசரியாக ஒரு வார உழைப்பை போட வேண்டும். ஆனால் அதற்கேற்ப லாபம் கிடைப்பதில்லை என்ற முத்து முருகன் மக்கள் இதை மண் தானே என்று நினைத்து குறைந்த விலைக்கு கேட்பதாக தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பண்டிகை நாட்களில் இதுபோன்ற சிறு, குறு தொழிலாளர்களிடம் அவர்களை புரிந்து கொண்டு சரியான விலை கொடுத்து பொருட்களை வாங்குவோம் இனியாவது, கார்த்திகை தீபத்திற்காக விளக்குகள் வாங்க விரும்புவோர் 88387 77672 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar