ஹோம் /விருதுநகர் /

மரம் வளர்ப்பில் செலவில்லாமல் ரூ.4 லட்சம் வருமானம்.. இப்படி ஒரு வருமான வாய்ப்பா? அட இது தெரியாம போச்சே..!

மரம் வளர்ப்பில் செலவில்லாமல் ரூ.4 லட்சம் வருமானம்.. இப்படி ஒரு வருமான வாய்ப்பா? அட இது தெரியாம போச்சே..!

விருதுநகர்

விருதுநகர்

Income From Trees | மழை மறைவு பிரதேசமான விருதுநகரிலும் மரம் வளர்த்து லாபம் ஈட்ட முடியும் என்கின்றனர் விவசாய வல்லுநர்கள். எந்த வகையான மரங்களை வளர்க்கிறோம் என்பதை பொறுத்து தான் லாபம் பெறுவது உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

தென்தமிழகத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம் பொதுவாகவே அதன் புவியியல் அமைப்பின்படி மழை மறைவு பிரதேசமாக உள்ளது.

இதனாலேயே இங்கு வெயில் சற்று அதிகமாக இருக்கும். விவசாயத்தை பொருத்த வரை மானாவாரி பயிர்கள் மட்டும் தான். மரம் வளர்ப்பு செய்து அதை தோப்பாக்கி லாபம் பெறுவது இங்கு அரிது. தண்ணீர் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். பொள்ளாச்சி போன்ற பகுதிகளை ஒப்பிடுகையில் மரம் வளர்ப்பு என்பது மிகவும் குறைவு. காரணம் தண்ணீர் பற்றாக்குறை தான்.

ஆனால் உண்மையில் மழை மறைவு பிரதேசமான விருதுநகரிலும் மரம் வளர்த்து லாபம் ஈட்ட முடியும் என்கின்றனர் விவசாய வல்லுநர்கள். எந்த வகையான மரங்களை வளர்க்கிறோம் என்பதை பொறுத்து தான் லாபம் பெறுவது உள்ளது.

மேலும் படிக்க:  இந்த தெருவுக்குள்ள நுழைஞ்சாலே மிரண்டு போவீங்க..! மதுரை 10 தூண் சந்து சிறப்புகள்..!

நம் மண்ணில் எந்த வகையான மரங்களை வளர்த்து சாகுபடி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள ஈஷா நர்சரி அமைப்பினரை சந்தித்தோம். அவர்கள் வறண்ட பூமியிலும் வேப்ப மரம், கொடிக்காய் மரம், செம்மரம், சந்தன மரம் போன்ற மரக்கன்றுகளை வளர்த்து லாபம் ஈட்ட முடியும் என்றனர்.

வேப்பமரம்:

பொதுவாக வேப்பமரம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளரக்கூடியது. இதன் தண்ணீர் தலைவரையும் குறைவு தான். ஓரளவுக்கு மரமாக வளரும் வரை தண்ணீர் ஊற்றி வளர்த்தால் போதும், அதன் பின்னர் அதுவே பூமியில் இருந்து தனக்கு தேவையான நீரை எடுத்து கொள்ளும்.

மேலும் படிக்க:  மதுரை மீனாட்சியம்மனுக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த முத்தீஸ்வரர் கோயில்.. அறியப்படாத தகவல்கள்..!

இதனுடைய பயன்களும் அதிகம்.வேப்பிலை மருத்துவ குணங்கள் மிக்கது. இதன் விதைகள் பலவிதமாக பயன்படுகின்றன.அதனால் வேப்பங்கொட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம். அது மட்டுமல்ல இந்த மரங்களின் ஆயுட்காலம் முடிந்த பின்னரும் இதன் மரக்கன்றுகளை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதை போன்று தான் கொடிக்காய், செம்மரங்களும் ஆரம்பத்தில் கொஞ்சம் பராமரித்தால் போதும் என்றனர். இதை சரியாக செய்தால் ஒரு சாதாரண விவசாயி ஆண்டுக்கு மூன்றில் இருந்து நான்கு இலட்சம் வரை வருமானம் பெற முடியும் அதும் குறைந்த முதலீட்டில், மேலும் இப்படி மரங்களை வளர்ப்பதன் மூலம் வறண்ட நம் பூமியை சோலை வனமாக மாற்ற முடியும்.

மேலும் படிக்க:  ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்.. நிரந்தர வருமானம் தரும் பாமாயில் பனை மரம் வளர்ப்பு

மேலும் இது தொடர்பாக விவசாயிகளுக்கு சில ஆலோசனைகள் வழங்க, ஏற்கனவே இந்த மரம் வளர்ப்பில் வெற்றி கண்ட வேளாண் வல்லுநர்களை கொண்டு சாத்தூரில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளதாகவும், அங்கு வரும் பட்சத்தில் இது தொடர்பாக மேலும் சில விபரங்களை பெற முடியும் என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விவசாய கருத்தரங்கில் பங்கு பெற 94425 90068 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar