முகப்பு /விருதுநகர் /

குத்துக்கல் முனிசாமி கோவிலில் புதைந்துகிடக்கும் சிறப்புகள்? - அகழாய்வு செய்யுமா தொல்லியல் துறை?

குத்துக்கல் முனிசாமி கோவிலில் புதைந்துகிடக்கும் சிறப்புகள்? - அகழாய்வு செய்யுமா தொல்லியல் துறை?

X
குத்துக்கல்

குத்துக்கல் முனிசாமி கோவில்

Kutukkal Munisamy Temple : குத்துக்கல் முனியசாமி கோவில் உட்பட கிருஷ்ணன் கோவில் பகுதியில் தொல்பொருட்கள் கிடைக்கும் நிலையில், தொல்லியல் துறையினர் இப்பகுதியை முறையாக அகழாய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கிராமம் குன்னூர். இந்த கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள கோவில்தான் குன்னூர் குத்துக்கல் முனீஸ்வரர் கோவில். தொடக்கத்தில் இது சாதாரண கிராம கோவிலாக இருந்து வந்த நிலையில், இந்த கோவிலில் உள்ள கல்லை ஆய்வு செய்த போது தான் இது பழமையான வீரர்களுக்கு வைக்கப்படும் குத்துக்கல் என்று, அதோடு நில்லாமல் இப்பகுதியில் முதுமக்கள் தாழியும் கிடைப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய கோவில் பூசாரி செல்லையா, சில ஆண்டுகளுக்கு முன்பு போர் போடுவதற்காக இந்த இடத்தை தோண்டிய போது இரண்டு முதுமக்கள் தாழி கிடைத்ததாக தெரிவித்தார். பின்னர் அதை அதே மண்ணில் போட்டு புதைத்துவிட்டதாக தெரிவித்த அவர்,இந்த கல் பழமையான கல் என உறுதி செய்யப்பட்ட பின்பு தொல்லியல் துறையோ அல்லது அரசாங்கமோ இது வரை இங்கு வந்து ஆய்வு ஏதும் செய்யவில்லை என்றார்.

பாரம்பரிய மிக்க இந்த இடத்திற்கு தினசரி பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட அரசாங்க தரப்பில் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த போது இடத்திற்கு பட்டா இல்லை என நிராகரித்து விட்டதாகவும், இன்று வரை கோவில் நிலத்திற்கு பட்டா வாங்க போராடி வருவதாகவும் வேதனை தெரிவித்தார் பூசாரி செல்லையா.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஒரு இடம் மட்டும் இல்லாமல், ஏற்கனவே கிருஷ்ணன் கோவில் மலையடிவார பகுதிகளில் நிறைய தொல்பொருள்கள் கிடைக்கும் நிலையில், தொல்லியல் துறை இப்பகுதியில் முழுமையாக அகழ்வாய்வு செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Virudhunagar