முகப்பு /விருதுநகர் /

சிவகாசி அம்மையார் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. பரவசத்தில் பக்தர்கள்!

சிவகாசி அம்மையார் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. பரவசத்தில் பக்தர்கள்!

X
மத்திய

மத்திய சேனை  கிராமத்தில் புகழ்பெற்ற அம்மன்  கோயில் குடமுழுக்கு 

Sivakasi kumbabishegam festival | சிவகாசி அருகே உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் 1000க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivakasi | Virudhunagar

சிவகாசி அருகே உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் 1000க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் சிவகாசி சாலையில் உள்ள மத்திய சேனை கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற அம்மையார் அம்மன் கோயில். இத்திருக்கோயிலில் மூலவராக உள்ள அம்மையார் அம்மன் மற்றும் பிற தெய்வங்கள் பிரசித்தி பெற்று விளங்கும் நிலையில் கடந்த 27ஆம் தேதியன்று கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கோவில் குடமுழுக்கை முன்னிட்டு கோவில் கோபுரத்தில் வைக்கப்பட்ட புதிய கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்படவே, உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இது குறித்து பேசிய கோவில் நிர்வாகி புகழ்பெற்ற அம்மையார் அம்மன் கோயில் 1943ம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், கடைசியாக குடமுழுக்கு நடத்தி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தற்போது இந்த குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது என்றார். மேலும் மூலவராக உள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்பதால் சென்னை, மதுரை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் அனைவரும் வந்து செல்வதாக அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Festival, Local News, Sivakasi, Temple, Virudhunagar