Home /virudhunagar /

கண்களைக் கவரும் விதவிதமான கொலு பொம்மைகள்: விருதுநகர் கதர் பவனில் கண்காட்சி

கண்களைக் கவரும் விதவிதமான கொலு பொம்மைகள்: விருதுநகர் கதர் பவனில் கண்காட்சி

கொலு

கொலு பொம்மைகள் கண்காட்சி

விருதுநகர் சர்வோதய சங்கத்தின் கதர் பவனில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
விருதுநகர் சர்வோதய சங்கத்தின் கதர் பவனில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கி உள்ளது.‌ இந்தாண்டு நிறைய அழகான பொம்மைகள் வந்துள்ளன. விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ளது கதர் பவன்.

இங்கே கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகின்றன.

புராண கதைகளை விளக்கும் பொம்மைகள் :

சிவன், விஷ்ணு, பிரம்மா போன்ற மும்மூர்த்தி பொம்மைகளும், லட்சுமி சிலைகள் மற்றும் அம்மன் சிலைகளும் இந்தாண்டு வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர புராண கதைகளை விளக்கும் வகையில் கனகாதாரா செட், அகலிகை சாப விமோசனம் செட் போன்ற பொம்மை செட்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் விநாயகர் நடனம் ஆடும் செட், பரதநாட்டியம் செட், வளைகாப்பு செட், திருமண செட், பொங்கல் செட் போன்ற செட் பொம்மைகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இது குறித்து கதர் பவன் நிர்வாகி முருகேசன் பேசுகையில், ’சர்வோதய சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு முப்பதாவது கண்காட்சி நடைபெறுவதாகவும், இக்கண்காட்சி நவராத்திரி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் நவராத்திரி பொம்மைகளுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சாமி பொம்மைகள் தவிர குழந்தைகள் வைத்து விளையாடும் மரப்பாச்சி பொம்மைகள், நேரு, காந்தி, எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நவராத்திரிக்கு கொலு வைக்க விரும்புவோர் பொம்மைகளை தேடி அலையாமல் விருதுநகர் கதர் பவனிற்கு சென்றால் நிறைய பொம்மைகளை பார்க்கலாம்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி