இந்தியாவில் நகரங்களை காட்டிலும் கிராமங்கள் தான் அதிகளவில் காணப்பட்டாலும், பெரும்பாலோர் கிராமங்கள் நகரங்களுக்கு அடுத்தபடி தான் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இந்தியாவின் வளர்ச்சியே கிராமங்களை நம்பி தான் உள்ளது. அது மட்டுமல்ல கிராம மக்கள் ஒன்று கூடி கிராம சபை கூட்டி ஒரு முடிவெடுத்தால் அதில் யாருமே தலையிட முடியாது. அப்படியொரு அதிகாரம் கொண்டது கிராம சபை கூட்டம்.
கிராம சபை கூட்டம்
நாடாளுமன்றம், சட்ட மன்றம் போல கிராமங்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் கிராம சபை கூட்டம். ஆனால் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக மக்களே நேரடியாக சபையில் விவாதிக்கலாம்.
இந்திய சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, தண்ணீர் தினம், உள்ளாட்சி அமைப்பு நாள் என ஆண்டிற்கு ஆறு முறை மட்டுமே நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்திற்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர் தான் இதற்கு பொறுப்பு.
கிராம சபை கூட்டம் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பே அதற்கான அறிவிப்பை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். அது மட்டுமல்ல தேர்வு செய்யப்படும் இடம் பொதுவான இடமாக இருக்க வேண்டும் அங்கு எல்லோரும் சரி சமமாக தரையில் அமர்ந்து விவாதிக்க வேண்டும் என்பது விதி.
இதையும் படிங்க : விவசாயத்திற்கு பயன்படும் சோலார் உலர்த்தி.. ஆர்வம் காட்டும் தேனி விவசாயிகள்!
யார் கலந்து கொள்ளலாம்?
சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சிக்கு சம்பந்தப்பட்ட அனைத்து மக்களும் கலந்து கொள்ளலாம். ஒரு கிராமத்தில் 500 இருக்கின்றனர் என்றால் குறைந்தபட்சம் ஒரு 50 பேராவது கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இது கிராம மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடலாம்.
எந்த நீதிமன்றமும் மாற்ற முடியாது
இந்த கூட்டத்தில் வெளிப்படை தன்மை உண்டாக்க கிராம ஊராட்சியின் செயல்பாடுகள், வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். அதில் சந்தேகம் இருந்தால் நேரடியாக கேள்வி கேட்டு பதில் பெற முடியும்.
மேலும் இங்கு கிராமங்களின் வளர்ச்சி திட்டம் மற்றும் பொதுப் பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றலாம். இந்த தீர்மானத்தை எந்த நீதிமன்றத்தாலும் மாற்ற முடியாது.
பல இடங்களில் பெயரளவு நடக்கிறது
இது தான் உண்மையான கிராம சபை கூட்டத்தின் அதிகாரம். இதனால் தான் கிராம சபை கூட்டத்தை மக்கள் கையில் அதிகாரம் என்கிறோம். ஆனால் கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அந்த கிராமம் சம்பந்தப்பட்டதாக இருத்தல் அவசியம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இத்தனை முக்கியமான கிராம சபை கூட்டம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பல இடங்களில் பெயரளவில் மட்டும் நடந்து வருகிறது. இதற்கு அரசாங்கம் காரணம் அல்ல. கிராம சபை கூட்டம் பற்றி அறிந்து கொள்ளலாமல் இருந்து வரும் நாம் தான் காரணம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar