ஹோம் /விருதுநகர் /

ராஜபாளையம் நாய்களின் தனித்துவம் பற்றி தெரியுமா?

ராஜபாளையம் நாய்களின் தனித்துவம் பற்றி தெரியுமா?

ராஜபாளையம்

ராஜபாளையம் நாய்கள்

Rajapalayam Dog Speciality | விஜய நகர பேரரசின் காலத்தில் ஆந்திர, கர்நாடக பகுதியில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டதாக கூறுகின்றனர். தற்போது இந்த இனங்கள் அங்கே முற்றிலும் அழிந்துவிட்டன. ராஜபாளையம் பகுதியில் மட்டும் காணப்படுவதால் இதை ராஜபாளையம் நாய் என்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rajapalayam | Virudhunagar

நாய்கள் பொதுவாகவே நன்றியுள்ள ஜீவன்கள். நன்றியுள்ளது மட்டுமல்ல அதிக பாசம் கொண்டதும் கூட.

நாய்களுக்கும் நமக்குமான தொடர்பு இன்றோ நேற்றோ ஏற்படவில்லை. தொன்று தொட்டு பண்டைய காலம் முதலே நமக்கும் நாய்களுக்குமான தொடர்பு இருந்து வருகிறது.

நாட்டு நாய்கள்:

இன்று பரவலாக காணப்படுகிற பொமேரியன், ஜெர்மன் செப்படு போன்ற நாய்கள் அனைத்தும் வெளிநாட்டு நாய்கள். நம் நாட்டிலே பிறந்து நம்மோடு வாழ்ந்த இனம் தான் நாட்டு நாய்கள். இந்த நாட்டு நாய்களை நம் முன்னோர்கள் வீட்டு காவலுக்கும், வேட்டைக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். நாட்டு நாய் என்றாலே நம் அனைவருக்கும் ராஜ பாளையம் நாய்கள் தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு அவை தனித்துவமானவை.

உலகில் 1000க்கும் அதிகமான நாய் இனங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றுள் 350 மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவை. அதில் 7 இனங்கள் இந்தியாவை சேர்ந்தவை அதிலும் ராஜபாளையம், கன்னி, சிப்பி பாறை, கோம்பை இந்த நான்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவை. இதில் ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றை காண அங்கு சென்றிருந்த போது, ராஜபாளையத்தில் 35 ஆண்டுகளாக நாய்கள் வளர்த்து வரும் குருசாமி தாத்தா நமக்கு நாய்களை அடையாளம் காட்டினார்.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

ராஜபாளையம் நாய்:

இந்த நாய்கள் விஜய நகர பேரரசின் காலத்தில் ஆந்திர, கர்நாடக பகுதியில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டதாக கூறுகின்றனர். தற்போது இந்த இனங்கள் அங்கே முற்றிலும் அழிந்துவிட்டன.

ராஜபாளையம் பகுதியில் மட்டும் காணப்படுவதால் இதை ராஜபாளையம் நாய் என்கின்றனர். சுத்த வெள்ளை நிறத்தில் மட்டுமே காணப்படும் இந்த இனத்தின் மூக்கு, கால், நாக்கு போன்றவை பிங்க் நிறத்தில் காணப்படும் இதன் மூலம் இதை அடையாளம் காணலாம். தற்போது இந்த நாய்கள் சில இடங்களில் ஒத்த இரத்த சொந்தத்தில் கலப்பு செய்யப்படுவதால் புதிதாக பிறக்கும் நாய்கள் காது கேளா தன்மையுடன் பிறப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவை தவிர ராஜபாளையம் பகுதியில் கன்னி சிப்பிப்பாறை போன்ற நாட்டு நாய் இனங்களும் பெருமளவில் காணப்படுகின்றன. இவையெல்லாம் ஒரு காலத்தில் வேட்டைக்காக மன்னர்கள் பயன்படுத்திய இனங்கள். மூர்க்க குணம் கொண்டிருந்தாலும் இன்றைய ராட் வீலர் , பிட் புல் போல உரிமையாளரையே தாக்குவது போல அல்லாமல் இவை மனிதர்களை அடையாளம் கண்டு அன்போடு பழகும் தன்மை கொண்டவை.  இவ்வளவு பெருமை மிக்க நாட்டு நாய்களை காக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும் அது நம் அனைவரின் கடமையும் கூட..

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar