Home /virudhunagar /

கீழ்க்குடி -தூய அன்னை மாதா கோயில் திருவிழா-ரேக்ளா ரேசில் சீறிப்பாய்ந்த காளைகள்

கீழ்க்குடி -தூய அன்னை மாதா கோயில் திருவிழா-ரேக்ளா ரேசில் சீறிப்பாய்ந்த காளைகள்

கீழ்க்குடி

கீழ்க்குடி -தூய அன்னை மாதா கோயில் திருவிழா-ரேக்ளா ரேஸ் சீறிப்பாய்ந்த காளைகள்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சி அடுத்த கீழ்க்குடி கிராமத்தில் தூய அன்னை மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு 25-ம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சி அடுத்த கீழ்க்குடி கிராமத்தில் தூய அன்னை மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு 25-ம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இதில் விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 8 ஜோடி பெரிய மாடுகளும், 11 ஜோடி சிறிய மாடுகளும் பந்தயத்தில் பங்கேற்றன. மாட்டு வண்டி பந்தயத்தில் பங்கேற்ற மாடுகள் சீறிப்பாய்ந்தன.
    சிறிய மாட்டிற்கு 6 கி.மீ தூரமும், பெரிய மாட்டிற்கு 8 கி.மீ தூரமும் பந்தய துாரமாக நிர்ணயிக்கப்பட்டது.வெற்றி பெற்ற மாடுகளுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த உக்கிரபாண்டி மாடு முதலிடம் பிடித்தது முதல் பரிசாக ரூ.-30,0001 வழங்கப்பட்டது.இரண்டாவது பரிசாக ராமநாதபுரம் மாவட்டம் கே. வேப்பங்குளத்தை சேர்ந்த மீ. கண்ணன் மாட்டுக்கு ரூ -25,001 வழங்கப்பட்டது. அதேபோல் மூன்று மற்றும் நான்காம் இடம் பிடித்த மாட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.15,001 ரூ-5,001 பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    அதேபோல் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் இடத்தைப் பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ஆப்பனூர்-அரியநாச்சி மாட்டுக்குரூ -15,001 , 2ம் இடம் பிடித்த மேலக்கிடாராம்  பகுதியைச் சேர்ந்த மாட்டு உரிமையாளருக்கு 10,001,3ம் இடம் பிடித்த சேதுபதி சூரங்குடி ரூ. -8,001, 4ம் இடம் பிடித்த ஆம்பனூர்-முத்திருளாண்டி ரூ.-4,001 பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    சீறிப் பாய்ந்து சென்ற காளைகளை, ஆயிரக்கணக்கான மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று ஆர்வமுடன் கண்டு களித்தனர். பந்தயத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருச்சுழி, அருப்புக்கோட்டை பரளச்சி, கீழ்குடி, பெருநாழி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பந்தயத்தை காண குவிந்திருந்தனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bull, Virudhunagar

    அடுத்த செய்தி