விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள வாகைகுளம், கள்ளக்காரி,கீழ்குடி, பெருநாழி இடையிலான சாலை மேம்பால பணிகள் கடந்த ஆறு மாத காலமாக மந்த கதியில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் கிராம மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேம்பால பணிகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாகைகுளம் கள்ளக்காரி, கீழ்குடி பெருநாழி இடையே சாலைகள் மோசமாக இருந்த நிலையில் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது தற்போது கடந்த சாலைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சாலை மேம்பால பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் வெளியூர் செல்வதற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேம்பால பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் வாகனங்கள் கரடுமுரடான பாதையில் பயணிக்கும்போது சேதமடைந்த வருவதாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதேபோல கர்ப்பிணிப் பெண்கள் வயதான முதியவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற சாலை வழியாக செல்வதால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இக்கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது, கடந்த ஆறு மாத காலங்களுக்கு முன்பாக மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும் அவசரத் தேவைகளுக்கு இச்சாலையை பயன்படுத்தாத சூழல் உருவாகியுள்ளது. அதேபோல் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலை மேம்பால பணிகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.