முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் | காசி விஸ்வநாதர் ஜோதிர்லிங்க தரிசனம் செய்யனுமா?

விருதுநகர் | காசி விஸ்வநாதர் ஜோதிர்லிங்க தரிசனம் செய்யனுமா?

X
விருதுநகர்

விருதுநகர் கோவில்

Kasi Viswanathar Jothirlinga Darshan | விருதுநகரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் காசி விஸ்வநாதர் தரிசனம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் காசி விஸ்வநாதர் தரிசனம் நடைபெற்றது.

சிவராத்திரி:

வருகின்ற சனிக்கிழமை 18 ம் தேதியன்று மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ளதையொட்டி விருதுநகரில் பொதுமக்களின் பார்வைக்காக பிரம்ம குமாரிகள் சார்பில் காசி விஸ்வநாதரின் மாதிரி வடிவம் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 11ம் தேதி விருதுநகரில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் தியான நிலையத்தில் நடைபெற்ற விழாவில், காசி விஸ்வநாதரின் லிங்கம் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் விருதுநகர் நகராட்சித் தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ஆர் மாதவன் கலந்து கொண்டு காசி விஸ்வநாதர் லிங்கத்தை திறந்து வைத்தார்.

மொத்தம் 15 மொழிகள் தெரியும்.. ஒரு மொழிக்கு 3 மாசம் தான்.. அசத்தும் கோவை இளம்பெண்!

பின்னர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், பிரம்ம குமாரிகள் சார்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. மேலும் இந்த லிங்க தரிசனமானது வரும் 15 ம் தேதி வரை நடைபெறும் என பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar