ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்குகள் விற்பனை அமோகம்

விருதுநகரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்குகள் விற்பனை அமோகம்

X
கார்த்திகை

கார்த்திகை தீப விளக்குகள்

விருதுநகரில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு விளக்குகள் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விருதுநகர் மார்க்கெட்டில் புதிய விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை நாளன்று அனைவரும் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றி தீபத்தை கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு டிசம்பர் 6 ம் தேதியான இன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கென தயார் செய்யப்பட்ட விளக்குகள் தற்போது மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த விளக்குகள் யாவும் மானாமதுரை மற்றும் விருதுநகரின் சுற்றுவட்டார கிராமங்களில் கார்த்திகை தீபத்திற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டு தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என்றும், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது விற்பனை சிறப்பாக நடை பெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய புதிய டிசைன்களில் செய்யப்பட்ட விளக்குகள் மற்றும் வண்ணம் பூசப்பட்ட விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், மக்கள் அதை ஆர்வத்துடன் வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் 6 முதல் 8 வரையிலான மூன்று நாட்களுமே மக்கள் இல்லங்களில் விளக்கேற்றுவர் என்பதால், மூன்று நாட்களும் விளக்குகள் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Local News, Tamil News, Virudhunagar