முகப்பு /விருதுநகர் /

காஷ்மீருக்கு 3,600 கி.மீ மாட்டு வண்டியில் தனி ஆளாக பயணம் செய்யும் சேலம் இளைஞர்.. என்ன காரணம்?

காஷ்மீருக்கு 3,600 கி.மீ மாட்டு வண்டியில் தனி ஆளாக பயணம் செய்யும் சேலம் இளைஞர்.. என்ன காரணம்?

X
சந்திரசூரியன்

சந்திரசூரியன்

Kanniyakumari to Kashmir | சேலத்தைச் சேர்ந்த இளைஞர் மாட்டு வண்டியில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்குச் பயணம் செல்கிறார். இவரின் இந்த பயணம் எதற்காக?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar | Tamil Nadu

விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சேலத்தைச் சேர்ந்த இளைஞர் தனியொரு ஆளாக குமரி முதல் இமயம் வரை 3,600 கி.மீ மாட்டு வண்டி பயணம் செய்துவருகிறார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசூரியன். பட்டதாரி இளைஞரான இவர் படித்த படிப்பிற்கேற்ற வேலைகளை தவிர்த்து விட்டு விவசாயம் மீதுள்ள ஆர்வத்தால் கடந்த 10 ஆண்டுகளாக சொந்த ஊரிலேயே விவசாயம் செய்து வருகிறார்.

விவசாயம் அழிந்துவரும் சூழலில் அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பியவர், தற்போது குமரி முதல் இமயம் வரை மாட்டுவண்டியில் பயணம் செய்து வருகிறார்.

கடந்த ஜனவரி 1 ம் தேதி கன்னியாகுமரியில் அவரது பயணத்தை தொடங்கிய இவர், இதன் ஒரு பகுதியாக விருதுநகர் வந்தடைந்தார். இந்தப் பயணம் குறித்து பேசிய சந்திரசூரியன், ‘செல்லும் வழியெல்லாம் விவசாயம் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே நாட்டு மாட்டு வண்டியில் பயணம் செய்து வருவதாகவும், விவசாய பொருட்களுக்கு அரசாங்கம் சரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றவர் மீண்டும் காஷ்மீர் நோக்கிய தனது பயணத்தை தொடங்கினார்.

First published:

Tags: Local News, Virudhunagar