முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் காமராஜர் கோவில்.. யார் கட்டினார் தெரியுமா?

விருதுநகரில் காமராஜர் கோவில்.. யார் கட்டினார் தெரியுமா?

X
காமராஜர்

காமராஜர் கோயில்

Kamarajar Temple : விருதுநகர் கட்டையபுரம் பகுதியில் எஸ்.பி.கணேசன் என்பவர் காமராஜர் காட்சியகம் என்ற பெயரில் அவருக்கு நினைவு இல்லம் கட்டியுள்ளார்.

  • Last Updated :
  • Virudhunagar, India

சினிமா நடிகைகளுக்கு கோவில் கட்டி வரும் இன்றைய தலைமுறையினர் மத்தியில் விருதுநகர் மண்ணில் பிறந்த மாமனிதரான காமராஜருக்கு தன் சொந்த இடத்திலே கோவில் போன்று காமராஜர் காட்சியகம் கட்டியுள்ளார் ஒருவர்.

தமிழ்நாட்டில் இன்றும் இவர் போல ஆட்சி தர யாரும் இல்லை என்று பேசப்படும் காமராஜரின் பெயர் 50 ஆண்டுகளை கடந்தும் தமிழக அரசியலில் நிலைத்து நிற்கும் சுழலில், விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டும் எப்போதும் அவர் எங்க மண்ணில் பிறந்தவர் என்பதில் பெருமை கொள்வார்கள். காமராஜர் பிறந்து வளர்ந்த இந்த மண்ணில் நாமும் இன்று உலாவிக்கொணடிருக்கிறோம் என்றால் அது நமக்கு பெருமை என விருதுநகரை சேர்ந்தவர்கள்பலர் இங்கு காமராஜர் மீது அதீத அன்பு வைத்துள்ளனர். அந்த அன்பு தான் ஒருவரை அவருக்கு கோவில் கட்ட வைத்தது.

விருதுநகர் கட்டையபுரம் பகுதியில் காமராஜர் காட்சியகம் என்ற பெயரில் அவருக்கு நினைவு இல்லம் கட்டியுள்ளார் அந்த பகுதியை சேர்ந்த எஸ்.பி.கணேசன் என்பவர். அதை நினைவில்லம் என்பதா அல்லது கோவில் என்பதா என குழம்பும் அளவிற்கு அதன் மையத்தில் காமராஜரின் சிலையை தேரில் வைத்து, அதை சுற்றி அவரை பற்றிய பல அரிய தகவல்கள் அடங்கிய புகைப்படங்களை காட்சிபடுத்தியுள்ளார். அது போக காமராஜரின் வரலாறு பற்றிய புகைப்படங்கள் அவரை பற்றிய செய்தி தாள் சேகரிப்பு களையும் காட்சி படுத்தியுள்ளார்.

இது பற்றி பேசிய எஸ்பி கணேசன், சிறுவயது முதலே காமராஜர் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அவரை பற்றிய தகவல்களை சேகரித்து வந்ததாகவும், பின்னர் அதை வைத்தே அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுதியதாகவும் தெரிவித்தார். பின்னர் இந்த தகவலை வரும் சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் தனது சொந்த இடத்தில் அவருக்கு ஒரு நினைவு இல்லம் கட்டியதாக தெரிவித்தார்.

நினைவு இல்லமாக இருந்தாலும் வந்து செல்லும் பார்வையாளர்கள் பலர் அங்குள்ள வருகை பதிவேட்டில் காமராஜர் கோவில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த நினைவு இல்லத்தை பார்வையிடுவதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் தினந்தோறும் இந்த காமராஜர் இல்லத்தை பார்வையாளர்கள் இலவசமாக பார்வையிட முடியும்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Virudhunagar