விருதுநகர் மாவட்ட ஆம்புலன்ஸ் சேவையில் EMT மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு வந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “EMT மற்றும் ஆம்புலன்ஸ் பணியிடங்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பபடுகிறது. இதற்கான தேர்வு நாளை (மே19ம் தேதி) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வேலைக்கான தகுதிகள் :
இ.எம்.டி என்று சொல்லப்படும் எமர்ஜென்சி மெடிக்கல் லேப் டெக்னீசியன் வேலைக்கு பி.எஸ்சி நர்சிங், ஏ.என்.எம். ஜி.என்.எம், டிப்ளமா இன் மெடிக்கல் லேப் டெக்னீசியன், டிப்ளமா இன் பார்மசி மற்றும் லைஃப் சையின்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க : இரவில் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஈரோடு ஜவுளி சந்தை பற்றி தெரியுமா?
வயது வரம்பு : 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, அடிப்படை மருத்துவ அறிவு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று பிரிவுகளாக நடக்கும்.
சம்பளம் : மாதம் ரூ.15,000
இதேபோல் ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், கையில் கனரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் கையில் இருக்க வேண்டும். உயரம் 163 செ.மீ க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு முறை எழுத்துத் தேர்வு, செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என 3 பிரிவுகளாக நடக்கும். மேலும் கண் பரிசோதனை உட்பட உடல் பரிசோதனைகளும் இருக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த 2 பணியிடங்களுக்கான தேர்வு வரும் மே 19ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அங்கு நேரில் அசல் சான்றிதழ்களோடு சென்று கலந்துகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Local News, Virudunagar