ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

விருதுநகர் ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Ration Shop Jobs : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 146 விற்பனையாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணிடங்கள் தொடர்பாக, விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 146 விற்பனையாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.

அதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https//www.vnrdrb.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதார ர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? என்பது போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJD8 என்ற யூடியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையிடம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்த தேவையான செலான்களை மேற்காண்ட இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.vnrdrb2022@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய தொலைபேசி எண்: 04562290769 வாயிலாகவும் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Job vacancies, Local News, Ration Shop, Virudhunagar