ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு- சம்பளம் ரூ.29000 வரை... முழுவிவரம்

விருதுநகர் மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு- சம்பளம் ரூ.29000 வரை... முழுவிவரம்

ரேஷன் கடை

ரேஷன் கடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளுக்கு (Ration Shops) விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நேரடி நியமனம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நேரடி நியமனம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில், 146 விற்பனையாளர்கள் மற்றும் 18 கட்டுனர்கள் பணிக்கு நேரடி நியனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நியாய விலைக்கடை விற்பனையாளர்களாக தேர்வு செய்யப்படுவோர்களுக்கு தொகுப்பு ஊதியம் ரூ.6250 நியமன நாளிலிருந்து ஓராண்டு வழக்கப்படுகிறது. அதன் பிறகு ஊதியம் ரூ, 8600 முதல் 29,000 வரை வழங்கப்படுகிறது.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

நியாய விலைக்கடை கட்டுநராக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நியமன நாளிலிருந்து ரூ.5500 ஓராண்டுக்கு வழங்கப்படும். அதன் பின் ரூ.7,800 முதல் 26,000 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.

இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://www.vnrdrb.net என்ற இணைய தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த வகையிலும் விண்ணப்பிக்க முடியாது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆன்லைனின் விண்ணப்பங்களை வரும் 14ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மட்டுமே அனுப்ப வேண்டும் . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Job vacancies, Local News, Ration Shop, Virudhunagar