ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் ரத்த தானத்தை சேவையாக செய்து வரும் ஐயப்ப பக்தர்கள்..

விருதுநகரில் ரத்த தானத்தை சேவையாக செய்து வரும் ஐயப்ப பக்தர்கள்..

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar Latest News | கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக விருதுநகரில் ரத்த தான முகாம்கள் நடத்தி அதன் மூலம் ரத்தம் தேவைப்படுவோர்க்கும் ரத்தம் வழங்கி சேவை செய்து வருகின்றனர் விருதுநகரை சேர்ந்த ஶ்ரீ ஐயப்ப சுவாமி மண்டல பூஜை விழா குழுவினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் தன்னார்வ இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக விருதுநகரில் ரத்த தான முகாம்கள் நடத்தி அதன் மூலம் ரத்தம் தேவைப்படுவோர்க்கும் ரத்தம் வழங்கி சேவை செய்து வருகின்றனர் விருதுநகரை சேர்ந்த ஶ்ரீ ஐயப்ப சுவாமி மண்டல பூஜை விழா குழுவினர். அந்த வகையில் இவர்களின் 119வது ரத்த தான முகாம் விருதுநகர் பகளம் திருமண மண்டபத்தில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆதரவுடன் நடத்தப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டு  ரத்த தானம் செய்தனர்.

இது குறித்து  மண்டல பூஜை குழுவை சேர்ந்த குருநாதன் நம்மிடம் பேசுகையில்,  இச்சேவையை கடந்த 2008 ம் ஆண்டு முதல் செய்து வருவதாகவும், தொடக்கத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முகாம் நடத்தப்பட்டு, பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்றாகி தற்போது மாதம் மாதம் முகாம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

மேலும் இது வரை 2000 க்கும் அதிகமாக நன்கொடையாளர்களின் விபரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், இதன் மூலம் அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படுவோர்க்கு ரத்தம் தானமாக கொடுத்து உதவி வருவதாகவும் தெரிவித்தார்.

வெறுமனே ஐயப்ப சுவாமியை கும்பிடுவதுடன் மட்டுமே நின்றுவிடாமல்அ சமூகத்திற்கு எதாவது நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதை செய்து வருவதாகவும் தெரிவித்தார். ரத்த தானம் செய்ய மற்றும் தானமாக பெற 9443144793 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar