ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்கள்.. உடனடியாக 29 மாணவர்களுக்கு ரூ.1.75 கோடி கல்வி கடன்..

விருதுநகரில் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்கள்.. உடனடியாக 29 மாணவர்களுக்கு ரூ.1.75 கோடி கல்வி கடன்..

விருதுநகரில் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்

விருதுநகரில் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்

Virudhunagar District News : விருதுநகரில் நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 255 மாணவர்களிடம் இருந்து ரூ.966.80 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் விண்ணப்பங்கள் மற்றும் உடனடியாக 29 மாணவர்களுக்கு ரூ.174.96 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வழங்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில் மாபெரும் கல்விக்கடன் முகாம் கடந்த 21.12.2022 அன்று நடைபெற்றது.  மாணவர்களின் வசதிக்கேற்ப விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் என வட்டார அளவில் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்களில் 255 மாணவர்களிடம் இருந்து ரூ.966.80 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும் 29 மாணவர்களுக்கு 174.96 லட்சம் மதிப்பிலான உடனடி கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், “விருதுநகரில் நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் 156 மாணவர்களிடம் இருந்து ரூ.486.06 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. 15 மாணவர்களுக்கு ரூ.75.34 லட்சம் மதிப்பிலான உடனடி கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது” என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சாத்தூர் காவலரை வெகுவாக பாராட்டிய விருதுநகர் எஸ்.பி - ஏன் தெரியுமா?

சிவகாசியில் நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் 99 மாணவர்களிடம் இருந்து ரூ.480.74 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. 14 மாணவர்களுக்கு ரூ.99.12 லட்சம் மதிப்பிலான உடனடி கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மொத்தமாக அனைத்து பகுதிகளிலும் சேர்த்து ரூ.966.80 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 29 மாணவர்களுக்கு உடனடியாக 174.96 லட்ச ரூபாய் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்

First published:

Tags: Local News, Virudhunagar