ஹோம் /விருதுநகர் /

பால் கொள்முதல் விலையை அதிகரிக்காவிட்டால் சப்ளை நிறுத்தும் போராட்டம்.. விருதுநகரில் பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

பால் கொள்முதல் விலையை அதிகரிக்காவிட்டால் சப்ளை நிறுத்தும் போராட்டம்.. விருதுநகரில் பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

விருதுநகரில்

விருதுநகரில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

Virudhunagar Latest News | பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரில் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி பால் உற்பத்தியாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

26.10.22 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.

இப்போராட்டத்தை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.T.இராமசாமி துவங்கி வைக்க,பொ.லிங்கம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவன ஈர்ப்பு உரை வழங்கினார். மேலும் போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்குவது, 50சதவிகித மானிய அடிப்படையில் கால்நடை தீவனங்கள் வழங்குவது, நீதிமன்ற உத்தரவின் படி பால் கொள்முதல் செய்யும் இடத்திலே அளவு மற்றும் தரம் பார்த்து அதற்கான ஒப்புகை சீட்டு வழங்குவது, கல்வி தகுதி அடிப்படையில் தரம் பார்க்கும் ஊழியர்களை பணியமர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

மேலும் படிக்க:  சிவகாசி பெயர் காரணமும் இங்கிருக்கும் சிவன் கோவிலின் சிறப்புகளும் - சுவாரஸ்ய தகவல்கள்!

பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தின் மூலம் சுமூகத் தீர்வு கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar