ஹோம் /விருதுநகர் /

Virudhunagar | "முன்ன மாதிரி வருமானம் இல்ல"- நவீன காலத்தில் இஸ்திரி தொழிலாளரின் தொழில் எப்படி உள்ளது?

Virudhunagar | "முன்ன மாதிரி வருமானம் இல்ல"- நவீன காலத்தில் இஸ்திரி தொழிலாளரின் தொழில் எப்படி உள்ளது?

இஸ்திரி

இஸ்திரி தொழிலாளி

Virudhunagar | நவீன தொழில்நுட்ப யுகத்தில் இஸ்திரி தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

முன்பெல்லாம் ஒவ்வொரு தெருக்களிலும் இஸ்திரி தொழிலாளர்களை பார்க்க முடியும். தற்போது அறிவியல் வளர்ச்சி, கல்வி முன்னேறத்தின் காரணமாக இஸ்திரி தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இருப்பினும், தற்போதும் பல பகுதிகளில் இஸ்திரி தொழிலாளர்களைப் பார்க்க முடியும். அவர்கள், சுமார் 20- 30 ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்துவருகிறார்.

மாறி வரும் சுழலில் இஸ்திரி தொழிலாளர்கள் இன்று எப்படி தங்கள் வாழ்நாளை கழிக்கின்றனர் என்பது பற்றி அறிய இஸ்திரி போடும் முருகேசன் அவர்களை சந்தித்தோம்.

இஸ்திரிப் பெட்டி

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி காளிதாஸ் மருத்துவமனையின் முன்பு பல ஆண்டுகளாக துணிகளுக்கு இஸ்திரி போட்டு வரும் அவர் இஸ்திரி தொழிலின் இன்றைய நிலை பற்றி விவரித்தார்.

இஸ்திரிப் பணியில் முருகேசன்

இதுகுறித்து பேசிய அவர், ‘முன்பு ஒரு காலத்தில் ஓய்வில்லாமல் துணிகளுக்கு அயர்ன் செய்ததுண்டு. ஆனால் இன்று நிலை அப்படியே மாறிவிட்டது. அதற்கு காரணம் வாஷிங்மெசின் மற்றும் அயர்ன்பாக்ஸ் வருகை தான். மின் சாதனங்கள் வருகையால் எங்களின் தேவை குறைந்துவிட்டது.

இஸ்திரி தொழிலாளி முருகேசன்

இன்று விஷேச நாட்களில் உடுத்தும் உடைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதால் அந்த உடைகள் மட்டும் இங்கு வருகின்றன. வரத்து குறைவால் நிறைய பேர் இதை விட்டு மாற்று வேலைக்கு சென்று விட்டதாகவும் கூறினார். முன்பெல்லாம் 600 ரூபாய் வரை வருமானம் ஈட்டிய தாகவும், ஆனால் இன்று 300 ரூபாய் கிடைப்பதே சிரமம் தான் என்று கூறிவிட்டு துணிகளுக்கு இஸ்திரி போட துவங்கினார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar