ஹோம் /விருதுநகர் /

நெற்பயிரை தாக்கும் ஆனைக்கொம்பன் பூச்சி - விருதுநகர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவுரை

நெற்பயிரை தாக்கும் ஆனைக்கொம்பன் பூச்சி - விருதுநகர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவுரை

நெற்பயிரை தாக்கும் பூச்சி 

நெற்பயிரை தாக்கும் பூச்சி 

Virudhunagar district | நெற்பயிரை தாக்கும் ஆனைக்கொம்பன் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியை விமலா விவசாயிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

ஆனைக்கொம்பன் பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியை விமலா கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் தற்போது நெற்பயிரில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இதனை விவசாயிகள் நன்கு கண்காணிக்க வேண்டும்.

புழுக்கள் வளரும் தூர்களை தாக்குகிறது. தூர்களை துளைத்து உட்சென்று வளரும் பகுதியை உண்கிறது. தாக்கப்பட்ட தூர்களில் நெற்கதிர்கள் வராது. மேலும் பயிர்களின் வளர்ச்சிக்குன்றி காணப்படும். தாக்கப்பட்டத் தூர்கள் வெங்காய இலை போல் அல்லது வெள்ளி தண்டு போல் காட்சியளிக்கும்.

இதனை கட்டுப்படுத்த பூச்சி உண்ணக்கூடிய மாற்றுவகைப் பயிர்களை அகற்ற வேண்டும். தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்தவேண்டும். புற ஊதா விளக்குப்பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஹெக்டேருக்கு பிப்ரோனில் 5 சதவீதம் இ.சி. 1000-1500 மி.லி அல்லது தயாமீதாக்சம் 25 சதவீதம் டபுள்யுஜி 100 கிராம் தெளிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மருந்து கரைசலை தெளிக்கும் போது பயிரில் நன்கு படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றினை (சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால், இன்ட்ரான் - வணிகப் பெயர்கள்) ஒரு லிட்டர் மருந்துக்கரைசலுக்கு ¼ மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக்கொள்ள வேண்டும்.

Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க! 

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றில் நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

First published:

Tags: Agriculture, Local News, Virudhunagar