Home /virudhunagar /

தண்ணீருக்கு பதிலாக இளநீர் கலந்து தயாரிக்கப்படும் ஜூஸ் வகைகள்.. விருதுநகரில் புதுமை படைக்கும் "ஜூஸ்" கடை..

தண்ணீருக்கு பதிலாக இளநீர் கலந்து தயாரிக்கப்படும் ஜூஸ் வகைகள்.. விருதுநகரில் புதுமை படைக்கும் "ஜூஸ்" கடை..

விருதுநகர்

விருதுநகர் - இளநீர் ஜூஸ்

Virudhunagar Ilaneer Juice Shop : உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் இயற்கையான பானங்களை விரும்புவோர் விருதுநகர் - கோவில்பட்டி சாலையில் கருமாதிமடம் அருகில் உள்ள இந்த fresh o fresh கடைக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம். இங்கு தண்ணீருக்கு பதிலாக இளநீரில் ஜூஸ் வகைகள் தயாரிக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar
    மழைக்காலம் தொடங்கிவிட்டாலும் கூட  நம்ம விருதுநகருக்கும் வெயிலுக்கும் இடையேயான பந்தம் எப்போதும் குறையாது. அதனாலயே நம் மாவட்ட மக்கள் எப்போதும் குளிர்பான கடைகளை நோக்கி படையெடுத்த வண்ணம் இருப்பர்.

    அந்த வகையில் வழக்கம் போல பாட்டிலில் அடைக்கப்பட்ட கூல்டிரிங்ஸை விற்காமல், தண்ணீருக்கு பதிலாக இளநீரில் ஜூஸ் போட்டு அசத்தி வருகிறார் fresh o fresh அருண் தங்கராஜ். இதை அறிந்து அங்கு சென்று பார்த்த போது தர்பூசணி, மாதுளை உள்ளிட்ட 12 வகை ஜூஸ்கள் தண்ணீர் சேர்க்காமல் இளநீர் சேர்த்து தயாரித்து கொடுக்கப்படுவதை காண முடிந்தது.

    ஒரே பானத்தில் ஜூஸ்-ன் சுவையும், அதற்கான நன்மையும், அதோடு சேர்த்து இளநீரின் நன்மையும், சுவையும் கிடைக்கிறது.
    விருதுநகரில் ஜூஸ் தயாரிப்பில் இவர்கள் பயன்படுத்திய யுக்தி மக்களுக்கு பிடித்து போகவே நல்ல வரவேற்பு கிடைப்பதாய் கூறுகிறார் இந்த கடையின் உரிமையாளர் அருண் தங்கராஜ்.

    விருதுநகர் - இளநீர் ஜூஸ் கடை


    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இந்த கடை இதன் தனித்துவம் காரணமாக இன்று நல்ல முறையில் இயங்கி வருகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் இயற்கையான பானங்களை விரும்புவோர் விருதுநகர் - கோவில்பட்டி சாலையில் கருமாதிமடம் அருகில் உள்ள இந்த fresh o fresh கடைக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    ஜூஸ் ரகங்களில் விலை பட்டியல்


    செய்தியாளர் : அழகேஸ்வரன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி