முகப்பு /விருதுநகர் /

திறந்து வைத்த ஓரே மாதத்திலேயே பழுதாகிவிட்ட ஐ லவ் விருதுநகர் செல்ஃபி பாயிண்ட் 

திறந்து வைத்த ஓரே மாதத்திலேயே பழுதாகிவிட்ட ஐ லவ் விருதுநகர் செல்ஃபி பாயிண்ட் 

X
திறந்து

திறந்து வைத்த ஓரே மாதத்திலேயே பழுதாகிவிட்ட ஐ லவ் விருதுநகர் செல்ஃபி பாயிண்ட் 

Viruthunagar | ஐ லவ் விருதுநகர் என்ற வார்த்தையில் உள்ள து மற்றும் ந என்ற எழுத்துகளின் லைட்டுகள் எரிவதில்லை என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் புத்தக திருவிழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஐ லவ் விருதுநகர் செல்ஃபி பாயிண்ட் பழுதாகிவிட்டதால், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகரில் நடைபெற்ற முதலாவது புத்தக திருவிழாவை முன்னிட்டு புத்தக திருவிழா மைதானத்தில், சென்னை,கோவை போன்ற பெரு நகரங்களை போல நகரை அழகுபடுத்தும் வகையில் ஐ லவ் விருதுநகர் என்ற செல்ஃபி பாயிண்ட் வைக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், தினசரி மக்கள் வந்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

புத்தக திருவிழா முடிந்த கையோடு இந்த செல்ஃபி பாயிண்ட் விருதுநகர் நகராட்சி பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கும் மக்கள் மாலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்ற நிலையில், செல்ஃபி பாயிண்ட் வந்த ஒரே மாதத்தில் அதனுடைய லைட்டுகள் பழுதாகி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஐ லவ் விருதுநகர் என்ற வார்த்தையில் உள்ள து மற்றும் ந என்ற எழுத்துகளின் லைட்டுகள் எரிவதில்லை என்று கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செல்ஃபி பாயிண்ட் இப்படி அரைகுறை மின்னொளியில் மிளிர்வது அதன் அழகை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே இதை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar