ஹோம் /விருதுநகர் /

செல்ஃபி பிரியர்களே.... நம்ம விருதுநகருக்கும் வந்தாச்சு செல்ஃபி பாயிண்ட்..

செல்ஃபி பிரியர்களே.... நம்ம விருதுநகருக்கும் வந்தாச்சு செல்ஃபி பாயிண்ட்..

X
விருதுநகரில்

விருதுநகரில் செல்ஃபி பாயிண்ட்

Virudhunagar District News : விருதுநகர் நகராட்சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரை அழகுபடுத்தும் விதமாகவும் பொதுமக்களின் கவனத்தை பெறுவதற்காகவும், விருதுநகரில் ஐ லவ் விருதுநகர் என்ற எழுத்து வடிவில் அழகான வரவேற்பு சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் அந்தந்த ஊர்களை அழகுபடுத்துவதற்காகவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் ஐ லவ் கோவை, நம்ம சென்னை போன்ற செல்ஃபி பாயிண்ட்கள் அமைக்கப்பட்டன.

அந்த வரவேற்பு சின்னங்களில் புகைப்படம் எடுத்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதை பதிவிட்டு ட்ரெண்ட் செய்தனர். இதனால் மற்ற பெருநகரங்களிலும் செல்பி பாயிண்ட்கள் வரத்துவங்கின.இதையெல்லாம் பார்த்த விருதுநகர் மக்களும் நம்ம ஊரில் இது போன்று எதாவது வராதா என்று ஏங்கிய நாட்கள் நிறையவே உண்டு.

இதையும் படிங்க : விருதுநகரில் சகாயத்தின் மக்கள் பாதை அமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்- ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

தற்போது அந்த ஏக்கத்திற்கு தீர்வாக விருதுநகரிலும் ஐ லவ் விருதுநகர் என்ற அழகான செல்ஃபி பாயிண்ட் வந்துள்ளது. முன்னதாக இந்த செல்ஃபி பாயிண்ட் விருதுநகர் புத்தக திருவிழாவிலேயே அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே இதற்கு நல்ல ஒரு வரவேற்பு இருந்த நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்ஃபி பாயிண்டை பார்த்து சென்றனர்.

அப்போது இது தற்காலிக செல்ஃபி பாயிண்ட்,புத்தக திருவிழா முடிந்ததும் இங்கிருந்து போய்விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் புத்தக திருவிழா முடிந்தவுடன் இந்த செல்ஃபி பாயிண்ட் தற்போது விருதுநகர் நகராட்சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய இளைஞர்கள் சிலர் இன்னும் மதுரையிலேயே இது போன்ற செல்ஃபி பாயிண்ட் வராத நிலையில் நம்ம ஊருக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், கோவை, சென்னை போன்ற செல்ஃபி பாயிண்ட்களை பார்த்த போது நம்ம ஊருக்கு வராதா என்று நினைத்தோம் தற்போது அது நிறைவேறியுள்ளது என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சமீபத்தில் விருதுநகரை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் நோக்கில் பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது வந்துள்ள இந்த செல்ஃபி பாயிண்ட் விருதுநகரை மேலும் அழகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Local News, Virudhunagar