ஹோம் /விருதுநகர் /

செல்போன் இருந்தாலே போதும்.. ஆதாரை ஈசியா மின் இணைப்போடு இணைக்கலாம்.. இதுதான் ஸ்டெப்ஸ்!

செல்போன் இருந்தாலே போதும்.. ஆதாரை ஈசியா மின் இணைப்போடு இணைக்கலாம்.. இதுதான் ஸ்டெப்ஸ்!

X
மாதிரி

மாதிரி படம்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Virudhunagar

ஆதார் எண் - மின் இணைப்பு எண் இரண்டையும் இணைக்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. அரசு அறிவித்ததில் இருந்து, பலருக்கும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. 

1. நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். நான் என்ன செய்வது என்ற சந்தேகம் தான் பெரும்பாலோர்க்கு இருக்கிறது. இதில் நீங்கள் உங்களுடைய ஆதார் எண்ணையோ அல்லது வீட்டின் உரிமையாளர் ஆதார் எண்ணையோஇணைத்துக் கொள்ளலாம். வாடகை வீட்டை மாற்றும் போது ஆதார் எண்ணை மாற்றிக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. தற்போது வீட்டின் உரிமையாளர் நான் தான். ஆனால் வீட்டின் மின் இணைப்பு பழைய ஓனர் பெயரில் உள்ளது என்றால் நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை வைத்தே இணைத்துக் கொள்ளலாம்.

3. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரேயொரு வீட்டிற்கு மட்டும் தான் 100 யூனிட் மானிய மின்சாரம் வழங்கப்படுமா? இல்லை உரிமையாளர் எத்தனை வீடுகள் வைத்திருந்தாலும் அவருக்கு அதே மானியம் தான் வழங்கப்படும்.

யாரெல்லாம் இணைக்க வேண்டும்?

மானிய அடிப்படையில் மின்சாரம் பெறுவோர்.. விவசாய, விசைத்தறி மின் இணைப்பு வைத்துள்ளோர் மற்றும் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர் இதை இணைக்க வேண்டும். கமர்சியல் பயன்பாட்டாளர்கள் தற்போதைக்கு இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

எப்படி இணைப்பது?

கூகுளில் www.tangedco.com என்ற மின்துறை இணையதளத்தை திறக்கவும்.
அந்த தளத்தில் அதன் வலது பக்கத்தில் ஆதாரை இணைக்க லிங்க் இருக்கும், அதை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்து வரும் தளத்தில் உங்களின் மின் இணைப்பு எண் கேட்கும் அதில் உங்களுடைய மின் இணைப்பு எண்ணை மாவட்ட குறியீடுடன்‌ உள்ளீடு செய்யவும்.
அதன் பின்னர் OTP அனுப்புவதற்காக அந்த மின் இணைப்பில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் காட்டும் அந்த நம்பர் உங்கள் கையில் இருந்தால் எஸ் என்று கொடுத்து OTP பெற்று அதை உள்ளீடு செய்யலாம். இல்லை அந்த மொபைல் எண் தற்போது இல்லை என்றால் நோ என்று கொடுத்து புதிய மொபைல் எண் கொடுத்து பின்னர் OTP பதிவு செய்யலாம்.
அடுத்ததாக மின் இணைப்பு யாருடைய பெயரில் உள்ளது என்ற விபரம் காட்டும். அதற்கு கீழே occupant details என்ற கட்டத்தில் owner, tenant, owner but service number name not transferred என்ற ஆப்சன் இருக்கும். நீங்கள் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைக்குப் இருப்போர் அல்லது வீட்டின் மின் இணைப்பு பழைய உரிமையாளர் பெயரில் என்பதற்கேற்ப அந்த கட்டத்தில் பூர்த்தி செய்யவும்.
அடுத்த கட்டத்தில் ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்ய வேண்டும்.
அதற்கு கீழே பெயர் கேட்கப்படும் அதில் பெயரை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
அப்லோட் ஆதார் ஆப்சனில் உங்களுடைய ஆதாரை JEPG வடிவில் 300kb க்கு மாற்றி பதிவு செய்ய வேண்டும்.
கடைசியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண் மின் இணைப்பு இரண்டும் இணைக்கப்பட்ட பின்பு அதற்குரிய செய்தி உங்கள் மொபைலுக்கு வரும்.
First published:

Tags: Aadhaar card, Aadhar, EB Bill, Local News