முகப்பு /விருதுநகர் /

நாய்கடியில் இருந்து எப்படி தப்பிக்கலாம்? விருதுநகர் கால்நடை மருத்துவர் சொல்லும் எளிய தற்காப்பு முறை!

நாய்கடியில் இருந்து எப்படி தப்பிக்கலாம்? விருதுநகர் கால்நடை மருத்துவர் சொல்லும் எளிய தற்காப்பு முறை!

X
மாதிரி

மாதிரி படம்

How to Escape Dog Bite | நாய்க்கு பயந்து வழக்கமான பாதையை விட்டு மாற்று பாதையில் செல்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

நாய்க்கடி என்பது இன்றைய சூழலில் வளர்ந்து வரக்கூடிய சமூக பிரச்சனையாக இருந்து வரக்கூடிய சுழலில் தினசரி செய்திகளில் நாய்க்கடி குறித்த செய்திகள் வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு நாய்கள் பிரச்சனை தீர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. நாய்க்கு பயந்து வழக்கமான பாதையை விட்டு மாற்று பாதையில் செல்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

நாய்கள் ஏன் கடிக்கின்றன?

பொதுவாக நாய்கள் மனிதர்களுடன் நன்கு பழக கூடியவை அப்படி இருக்கையில் நாய் ஏன் மனிதனை கடிக்க வேண்டும்? வழக்கமான விலங்குகளை போல நாய்களும் தங்களின் பாதுகாப்பிற்காக தான் மனிதர்களை தாக்குகின்றன என்கிறார் விருதுநகர் கால்நடை பராமரிப்பு துறை மண்டல உதவி இயக்குநர் நந்தகோபால், தொடர்ந்து நாய்க்கடி பற்றியும் நாய்கடித்தால் என்ன செய்ய வேண்டும் என விளக்கினார்.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு நாய் குரைத்து நம்மை நோக்கி வரும்போது முதலில் பயந்து ஓட கூடாது. அவ்வாறு செய்யும்போது நாய் துரத்த வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக எதாவது சத்தம் எழுப்பி நாயின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் நாயின் கடியில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளமுடியும். குறிப்பாக தெரியாத நாய்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.

இதையும் படிங்க : கோவையில் காட்டு யானை தாக்கி ஒரே நாளில் இருவர் பலி... எச்சரிக்கை விடுத்த வனத்துறை!

நாய் கடித்தால் இவற்றை பண்ணுங்க : 

நாய்க்கடித்தவுடன் முதலில் காயத்தை நீரில் 15 நிமிடம் சுத்தம் செய்துவிட்டு உடனடியாக மருத்துவமனை சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை வீட்டு நாயாக இருப்பின் அல்லது கடித்த நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி கொள்வதே நன்று. ஏனெனில் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு அதன் பின்னர் சிகிச்சை பெற்று காப்பாற்றுகிறது என்பது இயலாத ஒன்று.

தடுப்பூசியே சிறந்தது :

ரேபிஸ் நரம்பு மண்டலம் மூலமாக மூளையை தாக்க கூடியது. குறிப்பாக மூளைக்கு அருகில் உள்ள பகுதிகளான முகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கடி ஏற்பட்டால் ஆபத்து அதிகம். ஏனெனில் தடுப்பூசி தவனை முடிவதற்குள் வைரசானது நரம்பு மண்டலம் மூலம் மூளையை தாக்கிவிடும் அதனால் முடிந்த அளவிற்கு நாய்களை இதுபோன்ற பகுதிகளில் தாக்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இது தவிர ரேபிஸ் தாக்கம் ஏற்பட்ட நாயின் உமிழ்நீரில் வைரஸ் உயிர்ப்போடும் இருக்கும் என்பதால் உரிமையாளர்கள் நாயோடு விளையாடும்போது நாய் நம்மை நாவினால் நக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நாய்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தி கொண்டலே ஓரளவுக்கு ரேபீஸ் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம். ஆனால் ஒருவேளை தடுப்பூசி போடப்பட்ட நாய் நம்மை கடித்தாலும் எதற்கும் ஒரு பாதுகாப்பிற்கு நாமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவதே சிறப்பு.

First published:

Tags: Local News, Virudhunagar