முகப்பு /விருதுநகர் /

Virudhunagar Weather Update : விருதுநகரில் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்..

Virudhunagar Weather Update : விருதுநகரில் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்..

X
விருதுநகரில்

விருதுநகரில் கனமழை! சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

Virudhunagar Weather Update : விருதுநகரில் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், வாகனங்கள் அதில் தத்தளித்தபடி சென்றன.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் விருதுநகரிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மே 3ம் தேதியன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய மழையானது சுமார் ஒன்றரை மணி நேரம் கொட்டி தீர்த்தது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்ற நிலையில், மாவட்டத்தின் பிற பகுதிகளான சாத்தூர், அருப்புக்கோட்டை, ஶ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளிலுள்ள பரவலாக மழைப்பொழிவு காணப்பட்டது.

விருதுநகரில் பெய்த கனமழை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் அதிகபட்சமாக சிவகாசியில் 31 மி.மீ மழையும், விருதுநகரில் 27 மி.மீ மழையும், குறைந்தபட்சமாக திருச்சுழியில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடந்த மாதம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இம்மாத துவக்கத்தில் நல்ல மழை பெய்து வருவதால் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்‌.

First published:

Tags: Local News, Virudhunagar, Weather News in Tamil