முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் கொட்டி தீர்த்த கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

விருதுநகரில் கொட்டி தீர்த்த கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

X
விருதுநகரில்

விருதுநகரில் கனமழை 

Virudhunagar rain | விருதுநகரில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தீடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் இந்த மார்ச் மாதத்திலேயேவெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தீடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதானல்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மார்ச் மாதம் தொடங்கியதுமுதல் விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் விருதுநகர், கோவை , மதுரை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், விருநகரில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மதிய வேளையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.

மதியம் 3 மணியளவில்பலத்த காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழையானது சுமார் அரை மணி நேரம் இடைவிடாது கொட்டியநிலையில், சிறிது இடைவெளி விட்டு பின்னர் 6 மணிக்கு தொடங்கி மீண்டும் தொடங்கி7 மணி வரை பெய்தது.

top videos

    கடந்த சில நாட்களாக விருதுநகர் பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த காரணத்தால் பகலில் மட்டும் அல்ல இரவு நேரத்திலும் வெப்பநிலையானது அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென பெய்த மழையின் காரணமாக வெப்பநிலை குறைந்து இரவு முழுவதும் குளிர் நிலவியது. வெயிலால் சிரமப்பட்டு வந்த மக்கள் குளிர்விக்க வந்த மழையால்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    First published:

    Tags: Heavy rain, Local News, Virudhunagar