தற்போது குளிர்காலம் என்பதால் பெரும்பாலும் அனைவரும் சந்திக்க கூடிய பொது பிரச்சனை என்றால் அதுசளி பிடித்துக்கொள்ளுதல் தான்.சளி ஒரு பருவ கால நோய். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வயது வித்தியாசம் இன்றிபாதிக்க கூடியது.ஒருவருக்கு சளி பிடித்துவிட்டால் அன்று முதல் அவருக்கு நிம்மதி போய்விடும்.
அதனை தொடர்ந்து இருமல், காய்ச்சல் போன்றவை இலவச இனைப்பாக வந்துவிடும் என்பதால் சளியில் இருந்து விடுபட என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கும்.
அவ்வாறு சளி பிடித்திருக்கும் போது பெரும்பாலான மக்கள் பால் மற்றும் பால் பொருட்களை எடுத்துக்கொள்வதில்லை.
எனக்கு சளி பிடிச்சிருக்கு வேண்டாம் என தவிர்த்து விடுவதையே பெரும்பாலான மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். காரணம் பால் எடுத்துக் கொண்டால் சளி பிடிக்கும் அல்லது சளி பிடித்திருக்கும் போது பால் எடுத்தால் சளி அதிகமாகும் என்று பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது.
உண்மையில் பால் குடித்தால் சளி பிடிக்குமா என்ற கேள்விக்கு விடை தேடிய போது, திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் விருதுநகரை சேர்ந்த மருத்துவர் ஜெயராஜ் சேகர் கூறுகையில் பால் எடுத்துக் கொண்டால் சளி பிடிக்காது என்று கூறினார்.
இதுகுறித்து விளக்கிய அவர், ‘நமது உடலில் உள்ள கோவைப் படலம் என்ற பகுதி மியுகஸ் எனும் பிசு பிசுப்பான திரவத்தை சுரக்கிறது. இதனுடைய பணி உடலினுள் நுழையும் கிருமிகளை வெளியேற்றுவது. அவ்வாறு கிருமிகள் காற்றின் வழியாக உள்ளே நுழையும் போது இந்த கோவைப் படலம் அவற்றை சளியாக வெளியேற்றுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதால் அதில் கிருமிகள் அதிக நேரம் உயிர் வாழும். அதனால் தான் குளிர்காலத்தில் அதிகம் சளி பிடிக்கிறது.
காய்ச்சிய பால்:
இதில் பாலுக்கும் சளி பிடித்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உண்மையில் பால் ஒரு சத்தான பொருள். கறந்த காய்ச்சாத பாலில் வைரஸ், பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புண்டு. அதனாலே காய்ச்சிய பாலை பருக வேண்டும் என்கிறோம். மேலே சொன்னது போல பாலை நன்கு காய்ச்சி குடித்தால் சளி பிடித்தல் மட்டும் அல்ல வேறு எந்த கிருமி தொற்றும் ஏற்படாது.
இதே போல தான் மோர், தயிர் போன்ற பொருட்களும்.ஃப்ரிட்ஜில் வைத்த மோர் தயிரை எடுத்துக்கொள்வதை காட்டிலும் சாதாரண அறை வெப்பத்தில் இருக்கும் போது எடுத்துக்கொண்டால் எந்தவித தொந்தரவும் வர போவதில்லை என்கிறார்.
விருதுநகர் | ஆசிரியர் போல பாடம் நடத்தி அசத்தும் 5-ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவன்
செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudunagar