ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் வந்தாச்சு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்..

விருதுநகரில் வந்தாச்சு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்..

துப்பாக்கி

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்..

Gun Shooting Practice Academy in Virudhunagar | விருதுநகரில் முதல் முறையாக துப்பாக்கி சுடும் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரில் முதல் முறையாக துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

நம்ம ஊர் இளசுகளுக்கு விளையாட்டு என்றால் எப்போதும் அது கிரிக்கெட் மட்டும் தான். எந்த அளவுக்கு என்றால் இங்கு மற்ற விளையாட்டு போட்டிகளுக்கு இருக்கும் ரசிகர்களை விட கிரிக்கெட் மேட்ச்சிற்கு இருக்கும் ரசிகர்கள் அதிகம்.ஆனால் உண்மையில் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் கிரிக்கெட்டையும் தவிர இந்த உலகில் நிறைய விளையாட்டுகள் உள்ளன. அதில் வளர்ந்து வரும் விளையாட்டு தான் இந்த ஏர்கன் என்னும் துப்பாக்கி சுடும் கலை.

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்..

இது ஒரு சர்வதேச விளையாட்டும் கூட , கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்திய வீரர்கள் பதக்கம் வென்ற செய்திகளை கூட படித்திருப்போம். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த விளையாட்டு அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இதை கற்று தர சரியான களம் இல்லாததே.

மேலும் படிக்க:  மதுரை திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் பற்றிய அறியப்படாத தகவல்கள்..!

ஆனால் இப்போது முதல் முறையாக நம் விருதுநகரில் டைனமிக் ஏர்கன் க்ளப் மூலமாக துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் தலைமை தபால் நிலையம் அருகில் காலை மற்றும் மாலை வேளைகளில் செயல்பட்டு வரும் இந்த க்ளப்பில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க:  மதுரை மீனாட்சியம்மனுக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த முத்தீஸ்வரர் கோயில்.. அறியப்படாத தகவல்கள்..!

இது தொடர்பாக பேசிய இந்நிறுவன பயிற்சியாளர் சுப்ரமணி தானும் தனது துணைவியாரும் சேர்ந்து இதை நடத்தி வருவதாகவும், தற்போது சிபிஎஸ்இ மற்றும் ஸ்டேட் போர்டு பள்ளி மாணவர்கள் தங்களிடம் பயின்று வருவதாகவும் தெரிவித்தார். இது ஒரு வளர்ந்து வரும் சர்வதேச விளையாட்டு என்பதால் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றால் நிச்சயமாக இதில் சாதனை படைக்க இயலும் என்றும் தற்போது தங்கள் மாணவர்களை தென் மாநில அளவிலான போட்டிகளுக்கு தயார் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

துப்பாக்கி சுடும் பயிற்சியில் சேர விரும்புவோர் 80728 45576 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar