Home /virudhunagar /

விருதுநகரில் சிற்ப சாஸ்திரம் கொண்டு செதுக்கப்படும் நவீன கால சிலைகள்- உருவாகும் முறை தெரியுமா?

விருதுநகரில் சிற்ப சாஸ்திரம் கொண்டு செதுக்கப்படும் நவீன கால சிலைகள்- உருவாகும் முறை தெரியுமா?

விருதுநகர்

விருதுநகர் சிலை வடிவமைப்பு

விருதுநகரில் தேர்ந்தெடுத்தக் கற்களைக் கொண்டு சிற்ப சாஸ்திரத்தின்படி கற்சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
பொதுவாகவே ஒரு கோவிலை எடுத்துக்கொண்டால் அதில் அதிகம் நம் கவனத்தை ஈர்ப்பது அதிலிருக்கும் கடவுள் சிலைகளும், சிற்பங்களும் தான்.‌ சிற்பங்களை பொருத்தவரை அது பக்குவமாக அமைய பெறுவதில் தான் உள்ளது சிற்பியின் கைவண்ணம்.

முன் காலத்தில் சிற்பிகள் வெறும் உளியை கொண்டு கற்களை சிலைகளாக வடித்து வந்தனர். இன்றைய விஞ்ஞான காலத்தில் சிற்பிகள் எந்த விதமான நடைமுறையை பின்பற்றி சிற்பங்கள் செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள அல்லம்பட்டி முக்கு ரோட்டில் உள்ள சந்தோஷ் சிற்ப கூடத்திற்கு சென்றிருந்தோம்.

சிலைவடிவமைப்பு


அங்கு சென்று பார்த்த போது இன்றும் சிலைகள் பழைய முறைப்படி செதுக்கப்பட்டு வருவதை காண முடிந்தது. அதன் உரிமையாளர் சேகர் கூறுகையில் சிலை வடிப்பதற்கென நாத ஓசை உள்ள கற்களை தேர்ந்தெடுத்து அதற்கு பூஜைகள் செய்து, செதுக்கப்போகும் சிலையின் வடிவத்தை மனதில் உருவகம் செய்து கொண்டு செதுக்க வேண்டும் என்றார்.

உருவாக்கப்பட்ட கற்சிலைகள்


மற்ற மர சிற்பங்கள், ஐம்பொன் சிலைகள் போல கற்சிலைகள் வடிப்பது அவ்வளவு எளிதல்ல. கற்சிலைகள் வடிப்பதற்கு நிதானமும், கற்பனை திறனும் அதிகமாக தேவை என்றார். தற்போது அங்கு சிறிய அம்மன் சிலைகள் முதல் பெரிய கருப்பசாமி சிலைகள் வரை செதுக்கப்படுகின்றன. சிலைகளின் உயரத்திற்கேற்ப 4,000 ரூபாய் முதல் சிலைகள் செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கற்சிலைகள் வடிக்க விரும்புவோர் 73395 24339 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Published by:Karthick S
First published:

Tags: Virudhunagar

அடுத்த செய்தி