முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் பொருட்காட்சி தொடங்கியாச்சு.. ரெடியா மக்களே!

விருதுநகர் பொருட்காட்சி தொடங்கியாச்சு.. ரெடியா மக்களே!

விருதுநகர் பொருட்காட்சி

விருதுநகர் பொருட்காட்சி

Virudhunagar Exhibition | விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொருள் காட்சி துவங்கி நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Virudhunagar, India

ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவின்போது, திருவிழாவை மேலும் சிறப்பிக்க விருதுநகர் கேவிஎஸ் பள்ளி நிர்வாகம் சார்பில் பொருட்காட்சி நடத்தப்படும். பங்குனி பொங்கல் திருவிழாவிற்கு வரும் மக்கள், இந்த பொருட்காட்சிக்கும் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு பொருட்காட்சி வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களோடு வந்திறங்கியுள்ளது.

மார்ச் 24ம் தேதி மாலை 6 மணியளவில் விருதுநகர் கேவிஎஸ் பள்ளி மைதானத்தில், 75வது பொருட்காட்சி துவக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். உடன் மேனஜிங் ஃபோர்டு தலைவர் குணசேகரன், செயலாளர் ராஜா, பொருளாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    முதல் நாளில் கடைகள் குறைவாக காணப்பட்ட நிலையில், வந்திருந்த மக்கள் ராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டுகளில் விளையாடி கேவிஎஸ் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.

    First published:

    Tags: Local News, Virudhunagar