முகப்பு /விருதுநகர் /

சதுரகிரி மலையேற ரெடியா? வந்துவிட்டது வனத்துறை அறிவிப்பு

சதுரகிரி மலையேற ரெடியா? வந்துவிட்டது வனத்துறை அறிவிப்பு

சதுரகிரி

சதுரகிரி

Sathuragiri Hills | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சதுரகிரி மலையேற தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில், வனப்பாதுகாப்பு கருதி பக்தர்களை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கிறது.

மேலும் பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், அமாவாசையை முன்னிட்டு மார்ச் 19 முதல் 22 வரை பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்லலாம் என்று வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சதுரகிரி

இதையும் படிங்க : மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய பகுதிகள் ஒருவழிப்பாதையானது..

இதுதொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பக்தர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 வரை பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்லலாம். மழைப்பொழிவு இருப்பின் அனுமதி ரத்து செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar