முகப்பு /விருதுநகர் /

கூவம் நதி ஆகிறதா விருதுநகரின் கெளசிகா நதி? குமுறும் மக்கள்!

கூவம் நதி ஆகிறதா விருதுநகரின் கெளசிகா நதி? குமுறும் மக்கள்!

X
கவுசிகா

கவுசிகா நதியில் கொட்டப்படும் குப்பைகள்!!!!

Viruthunagar Kowsika River | விருதுநகரின் நிலத்தடி நீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் கெளசிகா நதியில் குப்பைகள் கொட்டப்பட்டுவருவதால் தற்போது மாசடைந்து காணப்படுகின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரில் பாயும் கெளசிகாநதியில் குப்பைகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் நதியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி கண்மாய்களில் மழைக் காலங்களில் கண்மாய் நிறைந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் காட்டாறு வெள்ள நீர் இரண்டும் சேர்ந்து கெளசிகா நதியாக உருவெடுத்து நகரின் மையப்பகுதியில் பாய்ந்து குல்லூர் சந்தை நீர்த்தேக்கத்திற்கு சென்றடைகிறது.

குறைந்த அளவே பயண தூரம் கொண்டிருந்தாலும் விருதுநகரின் நிலத்தடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் இந்த நதி தற்போது மாசடைந்து காணப்படுகின்றது.

குறிப்பாக வடமலைகுறிச்சியில் இருந்து நகருக்குள் நுழையும் ஆற்றில் குப்பைகளை கொட்டுதல் மற்றும் கழிவுநீர் கலப்பது போன்ற செயல்பாடு காரணமாக நதி மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது.

அதிலும் பாத்திமா நகர், ஆனைக்குழாய், ஆத்துமேடு குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் குப்பைகளை ஆற்றில் கொட்டுவதால் நதிநீர் மாசுபடுவதோடு , அப்பகுதியில் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் முறையாக திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளாததே இதற்கு காரணம் என கூறப்படும் நிலையில், மக்கள் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

First published:

Tags: Garbage, Local News, Virudhunagar