ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் திறந்தவெளியில் எரிக்கப்படும் குப்பைகளால் கேள்விக்குள்ளாகி வரும் சுகாதாரம்..

விருதுநகரில் திறந்தவெளியில் எரிக்கப்படும் குப்பைகளால் கேள்விக்குள்ளாகி வரும் சுகாதாரம்..

X
திறந்தவெளியில்

திறந்தவெளியில் எரிக்கப்படும் குப்பை

Virudhunagar District News : விருதுநகரில் திடக்கழிவுகள் முறையாக தரம் பிரிக்காமல் அப்படியே எரிப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் திடக்கழிவுகள் முறையாக தரம் பிரிக்காமல் அப்படியே எரிப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக பல முறை முறையீடு செய்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மொத்தமாக 36 வார்டுகளை கொண்ட விருதுநகர் நகராட்சி பகுதியில், குப்பைகள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, பின்னர் அவை குப்பை அள்ளும் வாகனத்திற்கு மாற்றப்பட்டு விருதுநகர் மாத்துநாயக்கன்பட்டி சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.

அவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் முறையாக கையாளப்படாமல் அப்படியே தீ வைத்து எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க : விருதுநகர் மக்கள் இனி வாட்ஸ்அப்பிலேயே அரசு சேவைகளை தெரிந்துகொள்ளலாம்!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை வழிகாட்டுதலின்படி, குப்பைகள் மொத்தமாக சேகரிக்கப்பட்டு பின்னர் அவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு, பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும்.எஞ்சிய மக்கும் குப்பைகளை அரைத்து தூளாக்கி நிலத்தில் நிரப்பி மக்க விடவேண்டும் என்பது தான் விதி.

ஆனால் இங்கு குப்பைகள் முறையாக தரம் பிரிக்கப்படாமல் பிளாஸ்டிக் குப்பைகளோடு தீ வைத்து எரிக்கப்படுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு இதனால் அருகில் வசிக்கும் அல்லம்பட்டி, விவிஆர் காலனி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நகராட்சி சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்ட போது, நகராட்சி பணியாளர்கள் யாரும் குப்பைகளுக்கு தீ வைப்பதில்லை என்றும் குப்பை கிடங்கில் இருக்கும் பழைய பொருட்களை சேகரிக்க வரும் மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து செல்வதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த குப்பைகளை முறையாக தரம் பிரிக்காமல் கொட்டி வைப்பதால் தான் இது போன்ற சுகாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஏற்கனவே நகராட்சிக்கு சுகாதாரம் மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar