ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்..  

விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்..  

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar Kooraikundu Village Panchayat | காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு ஊராட்சி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு ஊராட்சி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், மலைப்பட்டி தி.கஸ்தூரியம்மாள் அவர்களின் நினைவினை போற்றும் வகையில் இதுவரை 25 மருத்துவ முகாம்கள் மற்றும் 22 தமிழக பள்ளிகளில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் போன்ற மருத்துவ பணிகளை செய்து வரும் ANT அறக்கட்டளை எவ்வித பிரதிபலனுமின்றி சமூக அக்கறையுடன் அனைத்துவித மக்களும் பயனுரும் வகையில் மருத்துவ, கல்வி மற்றும் சமூக பணிகளை செய்து வருகிறது.

அந்த நோக்கின் பகுதியாக சமூக பணிகளின் தொடர்ச்சியாக ANT அறக்கட்டளை விருதுநகர் கன்னிமூல கணபதி கோவில் அறக்கட்டளை மற்றும் கூரைகுண்டு 9ம் வார்டு உறுப்பினர் சரோஜா மாதவனின் ஒத்துழைப்புடன் காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு விருதுநகர் மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதி மக்களின் விருப்பம் மற்றும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இலவச பொதுமருத்துவம், இருதயம், காது மூக்கு தொண்டை பரிசோதனை, பல் பரிசோதனை மற்றும் முடநீக்கு (பிஸியோதெரபி) பரிசோதனை ஆகியவற்றிற்கான முகாமினை அதன் இருபத்தைந்தாவது மருத்துவ முகாமாக நடத்தியது.

மேலும் படிக்க:  கால்வாய் கரையை உடைத்து எல்லையைக் காத்த வீரன்- மூவரை வென்றான் கிராமத்தின் வரலாற்று பின்னணி தெரியுமா

02/10/2022 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிவகாசி சாலையில் உள்ள குமரன் மஹாலில் பேரா.டாக்டர்.தி.ஜெயராஜசேகர், தலைவர், A.N.T அறக்கட்டளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமினில் மதுரை பாண்டியன் இருதய மருத்துவமனை சார்பில் இ.சி.ஜி, எக்கோ போன்ற இருதய பரிசோதனைகள்; விருதுநகர் மோகன் கிளினிக் சார்பாக பிஸியோதெரபி பரிசோதனை மற்றும் மதுரை ஆர்.ஆர் மருத்துவமனை சார்பில் நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (பி.எப்.டி), ஆடியோகிராம் செவி திறன் பரிசோதனை காது மூக்கு தொண்டை வீடியோ எண்டோஸ்கோப்பி பரிசோதனை மற்றும் பல் சிறப்பு பரிசோதனை உட்பட்ட பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும் படிக்க:  100 நாள் வேலை திட்டத்தில் புகார் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு.!

திருவனந்தபுரம் டாக்டர் சோமெர்வெல் நினைவு மருத்துவ மேலாண்மைக் கல்லூரியின் முதல்வரும் ஏ.என்.டி கல்வி,மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பேரா.டாக்டர்.தி.ஜெயராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமிற்கு கூரைக்குண்டு ஊராட்சி 9வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்  சரோஜா மாதவன், கூரைக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவி E.செல்வி, செவல்பட்டியினை சார்ந்த  M.மாரிக்கனி, கூரைக்குண்டு ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்  G.கார்த்திகா கணேஷ்குமார் மற்றும் விருதுநகர் மாவட்ட மருந்தாளுனர் சங்கத் தலைவர்  M.கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ANT அறக்கட்டளையின் பொருளாளர்  திருவேங்கடராமனுஜம், ANT அறக்கட்டளையின் ஆலோசகர் திரு.முகமது இப்ராஹிம் மற்றும்  ஜெ.அசோக்குமார் ஆகியோர் இம்முகாமினை ஒருங்கிணைத்திருந்தனர்.

மதுரை பாண்டியன் இருதய மருத்துவமனை சார்பில் அதன் தலைவர் மருத்துவர்.பாண்டியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இலவச இருதய பரிசோதனை செய்தனர். ஆர்.ஆர் மருத்துவமனை சார்பில் சார்பில் அதன் தலைவர் மருத்துவர். அ.தன்யன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இலவச ஆடியோகிராம் செவி திறன் பரிசோதனை, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை மற்றும் காது மூக்கு தொண்டை வீடியோ எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளை செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆர்.ஆர் மருத்துவமனையினை சார்ந்த சிறார் சிறப்பு பல் மருத்துவர் டாக்டர்.M.சித்திக் ஷா தலைமையிலான மருத்துவ குழுவினர் பல் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். விருதுநகர் மோகன் கிளினிக் சார்பில் முடநீக்கியல் வல்லுநர் டாக்டர்.ஜெயக்குமார் பிஸியோதெரபி சிகிச்சை வழங்கினார். 191 பேர் (காது மூக்கு தொண்டை - 58 பேர்; இதயம் – 82 பேர்; பல் – 24 பேர் மற்றும் பிஸியோதெரபி – 27 பேர்) பரிசோதனைகளை இலவசமாக செய்து மருத்துவர்கள் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar