முகப்பு /விருதுநகர் /

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம்...

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம்...

X
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே இலவச மருத்துவ முகாம் 

Virudhunagar News | காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் பரிசோதனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுபரிசோதித்து கொண்டனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

 அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் ஏஎன்டி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை நடத்தினர்.

விருதுநகரில் மருத்துவ முகாம்கள் நடத்தி சேவை செய்து வரும் ஏஎன்டி அறக்கட்டளையினர் இந்த முறை அருப்புக்கோட்டை எஸ்பிகே கலை அறிவியல் கல்லூரியுடன் சேர்ந்து அருப்புக்கோட்டை பகுதியில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர். அதன்படி கடந்த ஏப்ரல் 1 அன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உள்ள பாலையம்பட்டியில் பொதுமக்களுக்கான கண்,காது,மூக்கு,தொண்டை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதில் தகுந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு பொதுமக்களின் கண்,காது,மூக்கு,தொண்டை பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இது பற்றி பேசிய ஏஎன்டி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஜெயராஜ் சேகர் தொடர்ந்து ஏஎன்டி அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பாலையம்பட்டி பகுதி மக்களுக்காக மருத்துவ முகாம் நடத்த எஸ்பிகே கல்லூரியின் என்எஸ்எஸ் பிரிவு கேட்டு கொண்டதற்கு இணங்க அவர்களோடு கைகோர்த்து இந்த முகாம்மை நடத்தியதாக தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Virudhunagar