ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் இலவச கண் பரிசோதனை முகாம் 

விருதுநகரில் இலவச கண் பரிசோதனை முகாம் 

X
விருதுநகரில்

விருதுநகரில் இலவச கண் பரிசோதனை முகாம் 

Virudhunagar News : விருதுநகர் அரிமா சங்கத்தின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் அரிமா சங்கத்தின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டி.வி.எஸ் நடுநிலைப்பள்ளியில் விருதுநகர் அரிமா சங்கத்தின் 60வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு விருதுநகர் அரிமா சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

டிசம்பர் 18-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கிய  முகாமிற்கு விருதுநகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் A.R.R. சீனிவாசன் முன்னிலை வகிக்க விருதுநகர் நகராட்சி தலைவர் S.R.S.R.மாதவன் வாழ்த்துரை வழங்கினார்.

இதையும் படிங்க:  திருச்சியில் அரசு வேலை - 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்ட இம்முகாமில் பொதுமக்களுக்கு கண் புரை, கண் நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற கண்பாதிப்பு தொடர்பான பரிசோதனைகளும் அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து பேசிய விருதுநகர் அரிமா சங்கம் தலைவர் குமரவேல் ராஜன், “60 வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு விருதுநகர் அரிமா சங்கத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், அந்த வகையில் இந்த கண்பரிசோதனை முகாமில் கண்புரை கண்டறியப்படும் நபர்களை மதுரை அழைத்து சென்று அங்கு வைத்து இலவசமாக சிகிச்சை அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Tamil News, Virudhunagar