ஹோம் /விருதுநகர் /

ரயில்வே பாலத்தில் தோன்றியுள்ள நீருற்று..  குளமாய் காட்சியளிக்கும் விருதுநகர் கூரைக்குண்டு சுரங்க பாதை!

ரயில்வே பாலத்தில் தோன்றியுள்ள நீருற்று..  குளமாய் காட்சியளிக்கும் விருதுநகர் கூரைக்குண்டு சுரங்க பாதை!

X
இரயில்வே

இரயில்வே பாலத்தில் தோன்றியுள்ள நீருற்று!!!!  குளமாய் காட்சியளிக்கும் பாதை!

Virudhunagar News | விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ளது கூரைக்குண்டு கிராமம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் அடுத்துள்ள கூரைக்குண்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே தரைப்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் இருந்து நீர் வெளியேறி வருவதால் அந்த பாலம் குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அந்தப்பாதையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ளது கூரைக்குண்டு கிராமம். இங்குள்ள இரயில்வே க்ராஸிங்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரயில்வே துறையால் தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது.

மக்கள் பயன்படுத்தும் இது போன்ற ரயில்வே சுரங்க பாதைகளில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி நிற்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.. நீரை வெளியேற்ற தகுந்த வடிகால் அமைத்து வரும் நிலையில், இந்த பாலத்திலும் தேங்கும் மழைநீரை மோட்டார் கொண்டு உறிஞ்சி அருகில் உள்ள உறைகிணற்றில் சேகரிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது

ஆனால் தற்போது உறைக்கிணற்றில் உள்ள நீரானது பூமி வழியாக ஊடுருவி மீண்டும் பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் நீருற்றாக வெளியாகி வருகின்றன.இதனால் மோட்டார் போட்டு நீரை வெளியேற்றினாலும் தண்ணீர் மறுபடியும் பாலத்திற்கே வந்துவிடுகிறது.

இதற்கு என்ன காரணம் என பொறியாளர் ஒருவரிடம் கேட்ட போதுஉறைக்கிணறானது பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதால், நீர் எளிதாக நிலத்தில் ஊடுருவி மீண்டும் பாலத்திற்கு வந்து விடுகிறது. இதற்கு ஒரே தீர்வு உறைகிணற்றை சற்று தொலைவில் அமைப்பதே என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நல்ல மழை பெய்தால் இடுப்பளவிற்கு தண்ணீர் நிற்பதால் இந்த வழியே செல்ல முடியவில்லை என்கின்றனர் அப்பகுதி இளைஞர்கள். இது குறித்து பேசிய கூரைக்குண்டை சேர்ந்த அய்யனார் நாங்கள் இந்த பாதை விட்டால் மாற்று பாதைக்கு 3 கிலோமீட்டர் சென்று வேறு பாதையில் செல்ல வேண்டியுள்ளது. மேலும் பாலத்தில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் நடைபாதையில் பாசி படர்ந்து அதனால் அவ்வழியே செல்வோர் வழுக்கி விழுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. மேலும் இது பாலத்தின் உறுதி தன்மையை பாதிக்க கூடும் என்பதால் இதற்கு தென்னக இரயில்வே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

.

First published:

Tags: Local News, Virudhunagar