ஹோம் /விருதுநகர் /

வறண்ட விருதுநகர்ல கண்ணுக்கு குளிர்ச்சியா இப்படியொரு இடமா..! வெளிநாட்டு பறவைகள் தேடி வரும் செங்குளம்.. சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

வறண்ட விருதுநகர்ல கண்ணுக்கு குளிர்ச்சியா இப்படியொரு இடமா..! வெளிநாட்டு பறவைகள் தேடி வரும் செங்குளம்.. சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

செங்குளம்,

செங்குளம், விருதுநகர் மாவட்டம்

Birds Sanctuary in Virudhunagar | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை (இடப்பெயர்வு) வர துவங்கி உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

பறவைகளுக்கு தங்களின் வசிப்பிடத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம், உணவு பற்றாக்குறை போன்ற காரணங்களால் அவற்றின் வசிப்பிடத்தை விட்டு வேறு இடங்களுக்கு வலசை (Migration) செல்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பறவைகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இதனால் சில இடங்களை அரசாங்கம் பறவைகள் சரணாலயமாக அறிவித்து பறவை இனங்களை பாதுகாக்க முயற்சி செய்து வருகிறது. உதாரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை குறிப்பிடலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் பறவைகளுக்கென சரணாலயம் எதுவும் இல்லை. ஆனாலும் சமீப ஆண்டுகளாக இங்குள்ள நீர்நிலைகளை நோக்கி வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வலசை வருகின்றன. தற்போது சீசன் தொடங்கி விட்டதால் விருதுநகர் மாவட்டத்தின் திருத்தங்கல், அருப்புக்கோட்டை பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு வெளிநாட்டில் இருந்து பறவைகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளன.

செங்குளம், விருதுநகர் மாவட்டம்

மேலும் படிக்க:  சொன்னதை செய்த அஜித் ரசிகர்..!!

செங்குளம்:

திருத்தங்கல் aருகேயுள்ள செங்குளத்திற்கு வெளிநாட்டு பறவைகளான கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை போன்றவை வருகை தந்துள்ளன. இவை தவிர நீர்க்காகம் போன்ற உள்நாட்டு பறவை இனங்களும் வந்துள்ளன. இக்குளத்தில் அதிகளவில் மீன் வளம் உள்ளதால் அதை உண்பதற்கு பறவைகள் வந்து செல்வதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

செங்குளம், விருதுநகர் மாவட்டம்

மேலும் படிக்க:  உலகில் நான்கு குடும்பங்கள் மட்டுமே செய்யும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் பற்றி தெரியுமா?

பறந்து விரிந்த குளத்தில் அழகான பறவைகள் இருப்பதை பார்பதற்கு ரம்மியமான காட்சியாக இருப்பதால் சுற்றுப்புற மக்கள் இங்கு தேடிவந்து பறவைகளை பார்வையிட்டு செல்கின்றனர். அதே நேரத்தில் இந்த குளமானது மாசடைந்து புதர் மண்டி காணப்படுவதால், பார்வையாளர்களால் குளத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை. பறவையின் அழகு ஒரு பக்கம் ரசிக்க வைத்தாலும் , குளத்தின் சாக்கடை துர்நாற்றம் இன்னொரு பக்கம் நம்மை முகம் சுளிக்க வைக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அருகில் இருக்கும் கழிவுநீர் இந்த குளத்தில் கலப்பதும், பொதுமக்களின் பொறுப்பேற்ற தன்மையும் தான் இந்த குளம் மாசடைந்து காணப்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. இப்படியொரு சூழலில் அடுத்த சீசனிலாவது , குளத்தை முழுமையாக சுத்தம் செய்து, சுற்றிலும் நடைபாதை பூங்கா அமைத்து மக்கள் பறவையின் அழகை ரசிக்கும் படி அமைப்பு ஏற்படுத்தி கொடுத்தால் விருதுநகர் மாவட்டத்தில் சூழல் சுற்றுலா மேம்படும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் கவனிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar