ஹோம் /விருதுநகர் /

‘ரூ .5 பாடசாலை’ மாணவர்களின் கல்விக்காக சிவகாசியில் உணவு திருவிழா..

‘ரூ .5 பாடசாலை’ மாணவர்களின் கல்விக்காக சிவகாசியில் உணவு திருவிழா..

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம்

Sivakasi Day | பொதுமக்களுக்காக ஒன்றாய் உண்டு ஒன்றாய் உயர்வோம் என்ற தலைப்பில் 200 ரூபாய் உணவு திருவிழாவும் நடைபெற்றது. இதில் கிடைக்கும் வருவாய் ஐந்து ரூபாய் பாடசாலை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi | Virudhunagar

'சிவகாசி தினம்' மற்றும் உலக உணவு தினத்தை முன்னிட்டு சிவகாசியில் புகைப்பட கண்காட்சி மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது.

சிவகாசி தினம்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாணவர்களுக்கென ஐந்து ரூபாய் பாடசாலை நடத்தி வரும் ரைட் க்ளப் பார் எஜூகேசன் அமைப்பினர் அக்டோபர் 1 - சிவகாசி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை கடந்த இரு வாரங்களாக நடத்தி வந்தனர்.

மாணவர் தினம்:

இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தினமான அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 15 மற்றும் 16 தேதிகளில் கல்வி மேளா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

மேலும் சிவகாசி தின சிறப்பாக சிவகாசியின் புகழ் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், பிரின்டிங் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

உணவு தினம்:

அக்டோபர் 16  அன்று உணவு தினம் என்பதால், பொதுமக்களுக்காக ஒன்றாய் உண்டு ஒன்றாய் உயர்வோம் என்ற தலைப்பில் 200 ரூபாய் உணவு திருவிழாவும் நடைபெற்றது. இதில் கிடைக்கும் வருவாய் ஐந்து ரூபாய் பாடசாலை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படிருந்ததால் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெகு விமரிசையாகவும் , மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்ட இந்நிகழ்வின் இறுதியில் கல்வி மேளாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஜெசிஎஸ் பதின்ம பள்ளி முதல் இடத்தையும் , விநாயகர் மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ஆர் எஸ் ஆர் இன்டர்நேஷனல் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றன.

Published by:Arun
First published:

Tags: Local News, Sivakasi, Virudhunagar