முகப்பு /விருதுநகர் /

ஆளில்லா பூக்கடையில் நள்ளிரவில் தனியாக தொங்கும் மாலைகள்.. விருதுநகரில் மலர்ந்த மனிதநேயம்..

ஆளில்லா பூக்கடையில் நள்ளிரவில் தனியாக தொங்கும் மாலைகள்.. விருதுநகரில் மலர்ந்த மனிதநேயம்..

X
பூக்கடையில்

பூக்கடையில் நள்ளிரவில் தனியாக தொங்கும் மாலைகள்

Virudhunagar News : விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள ஒரு பூட்டிய பூக்கடையில் நள்ளிரவில் தனியாக மாலைகள் மட்டும் தொங்குவதை அடிக்கடி காணமுடிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் ஒரு பூட்டிய பூக்கடையில் நள்ளிரவில் தனியாக மாலைகள் மட்டும் தொங்குவதை காணமுடிந்தது. அதுவும் சில நாட்களில் 2 முதல் 4 மாலைகள் தொங்கும். பாதுகாப்பு இல்லாமல் மாலையை மட்டும் இப்படி ஏன் வெளியில் வைத்து செல்கின்றனர் என கேள்வி எழ, அதற்கு விடை தேடியபோது தான் தெரிய வந்தது அதன் பின்னணியில் இருக்கும் உண்மை.

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள ரோசல்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் எதிரே சிறிய பூக்கடை ஒன்றை நடத்தி வருகிறார் வனராஜ். பகல் முழுவதும் பூக்கட்டி வியாபாரம் செய்து வரும் இவர், இரவு வந்ததும் கடையை பூட்டுவதற்கு அனைத்து பொருட்களையும் பாதுகாப்பாக எடுத்து வைத்து விட்டு, 4 மாலைகளை மட்டும் கடையின் முன்பக்கம் தொங்கவிட்டு மீதி மாலைகளை எடுத்து வைத்துவிட்டு செல்கிறார்.

அவர் வைத்த 4 மாலைகள் மட்டும் இரவில் தனியாக தொங்குகின்றன. இதுபற்றி நேரடியாக வனராஜிடம் கேட்டபோது அருகில் எதாவது துக்க வீடு இருந்தால் அவர்களுக்காக அந்த மாலையை வைத்து விட்டு செல்வதாக கூறினார். ஏன் என்றால் இரவு நேரத்தில மாலை கிடைக்காது. அந்நேரம் யாரும் கஷ்டபடக்கூடாது என்று கூறிய அவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து இதை செய்து வருவதாக கூறினார்.

இதையும் படிங்க : பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்த மலைப் பாம்பு... அலறியடித்து ஓடிய ஊழியர்கள்!

கொரோனா காலத்தில், மாலையின் தேவை அதிகமாக இருந்தது. அதனால் தினசரி வைத்து விட்டு சென்றதாகவும், இப்போது அருகில் எதாவது துக்க நிகழ்வு பற்றிய செய்தி வந்தால் அவர்களுக்காக வைத்து விட்டு செல்வதாக தெரிவித்தார். இதற்காக பணம் எப்படி பெறுவீர்கள் என்று கேட்டபோது, ஒரு சிலர் அடுத்த நாள் வந்து தருவர். சிலர் கடையின் மேசையில் வைத்து செல்வர். சிலர் தர மாட்டாங்க. அதை பற்றி எதுவும் நினைப்பதில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதை தான் ஒரு சமூக சேவையாக தான் செய்து வருவதாக அவர் கூறினார். துக்க நிகழ்வுகளில் பிறருக்கு உதவி செய்து அவர் துன்பத்தில் பங்கு கொள்ளும் அவரை வாழ்த்தி விட்டு விடை பெற்றோம்.

First published:

Tags: Local News, Virudhunagar