முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் ஜல்லிக்கட்டு போட்டியில் திடீர் தீ விபத்து.. பாய்ந்து காப்பாற்றிய தீயணைப்புத்துறை!

விருதுநகர் ஜல்லிக்கட்டு போட்டியில் திடீர் தீ விபத்து.. பாய்ந்து காப்பாற்றிய தீயணைப்புத்துறை!

X
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு தீ விபத்து

Virudhunagar jallikattu fire accident | விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது  அங்கே திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஏற்பட்ட தீயினை,தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற அழகிய பெருமாள் கோயில் மற்றும் பெரிய கருப்பண்ணசாமி கோவிலின் மாசி களரி திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி சில தினங்களுக்கு முன் நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியானது இடை நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மார்ச் 10 அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது, மதிய வேளையில் வாடிவாசல் அருகே உள்ள திறந்தவெளி பகுதியில் காணப்பட்ட காய்ந்த புற்கள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கின.

ஏற்கனவே காய்ந்த என்பதால் அதன்மீது பற்றி எரிய தொடங்கிய தீயானது மளமளவென எரிய தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட அங்கிருந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயணைப்பு வாகனத்தை எடுத்து வந்து தீயை அணைத்தனர்.‌இதனால் நிகழவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

First published:

Tags: Fire accident, Local News, Virudhunagar