ஹோம் /விருதுநகர் /

Virudhunagar | இளமைக் காலம் முதல் தண்டி யாத்திரை வரை... காந்தியின் அரிய புகைப்படங்கள் கொண்ட கண்காட்சி

Virudhunagar | இளமைக் காலம் முதல் தண்டி யாத்திரை வரை... காந்தியின் அரிய புகைப்படங்கள் கொண்ட கண்காட்சி

காந்தி

காந்தி புகைப்படக் கண்காட்சி

Virudhunagar | விருதுநகரில் காந்தியடிகளின் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு  புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தின் மேல் தளத்தில் காந்தியடிகளின் புகைப்பட தொகுப்பு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

அகிம்சை வழியில் நாட்டு விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் உழைத்தவர் மகாத்மா காந்தி. அவரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், காந்தியடிகளின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை வரும் இளைய தலைமுறையினரிடையே எடுத்து செல்லும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காந்தியின் புகைப்படம்

இக்கண்காட்சியில் காந்தியடிகள் பங்கேற்ற தண்டி யாத்திரை போன்ற அகிம்சை போராட்டங்கள், முக்கிய வரலாற்று நிகழ்வுகள், காந்தியின் இளைமை கால புகைப்படங்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் புகைப்படங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கைராட்டை

மேலும் காந்தியடிகள் என்றாலே கைராட்டை தான் அனைவரின் நினைவுக்கு வரும், அதன் நினைவாக கைராட்டையும் வைக்கப்பட்டுள்ளது.

காந்தி புகைப்படக் கண்காட்சி

இதுகுறித்து பேசிய விருதுநகர் அரசு அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள், ‘இந்த கண்காட்சி வரும் அக்டோபர் 10 வரை நடைபெறும் எனவும், அது வரை பொதுமக்கள் பார்வையிடலாம் எனவும் தெரிவித்தார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar