முகப்பு /விருதுநகர் /

காலையில் கல்லூரி, மாலையில் பாஸ்புட் கடை.. விருதுநகரை கலக்கும் கல்லூரி பேராசிரியர்..

காலையில் கல்லூரி, மாலையில் பாஸ்புட் கடை.. விருதுநகரை கலக்கும் கல்லூரி பேராசிரியர்..

X
விருதுநகரை

விருதுநகரை கலக்கும் கல்லூரி பேராசிரியர்

Virudhunagar Professor : காலையில் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து கொண்டே மாலையில் சிற்றுண்டி கடை நடத்தி மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் பழனிக்குமார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரை சேர்ந்தவர் பழனிக்குமார். இவர் மதுரை சாலையில் சிறிய சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். அதே நேரத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். ஒரு ஆசிரியர் உணவுக்கடை நடத்தி வருகிறாரா என்று ஆச்சரியப்பட்டு அங்கு நேரில் சென்று பார்த்தபோது, அத்தோ, பானிபூரி என பல வகையான சிற்றுண்டிகளை தயார் செய்து அசத்தி வருகிறார்.

இதுபற்றி பழனிக்குமார் பேசியபோது, “பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்து விட்டு சில காலம் சென்னையில் பணிபுரிந்து வந்தேன். பின்னர் இங்கு வந்து கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியை தொடங்கினேன். எனக்கு சொந்தமாக ஒரு உணவகம் தொடங்க வேண்டும் என்ற ஆசையிருந்ததால் சிறிய முதலீட்டில் இந்த சிற்றுண்டி கடையை தொடங்கி 3 ஆண்டுகளாக நடந்தி வருகிறேன்.

ஒரு சிலர் ஒரு காலேஜ் வாத்தியார் இப்படி ரோட்டு கடை நடத்தி வருவது நல்லாவா இருக்கு? என கேட்டனர். அதெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா தொழிலும் நல்ல வேலை தான் என்ற அடிப்படையில் இதை விரும்பி செய்து வருகிறேன்” என புன்னகைக்கிறார் பழனிக்குமார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் மாணவர்கள் கூட சிலர் இவரின் முயற்சியால் கவரப்பட்டு அவர்களும் தங்களின் பகுதியில் சிற்றுண்டி கடை நடத்தி அதை வைத்து அவர்கள் கல்லூரி கட்டணம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். யார் என்ன சொன்னாலும் சரி தனக்கு அது பற்றிய கவலை இல்லை. காலையில் கல்லூரி சென்று மாலையில் இங்கு வருவது ஓய்வில்லாத உழைப்பாக இருந்தாலும், ஒரு நாள் இதை பெரிய உணவகயாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓடி வருவதாக தெரிவிக்கிறார் பேராசிரியர் பழனிக்குமார்.

First published:

Tags: Local News, Virudhunagar